சம்பா சோகம்: மேலும் ஒரு விவசாயி தூக்கு போட்டு தற்கொலை
தஞ்சாவூர்:
சம்பா பயிர்கள் கருகியதால் பெண் விவசாயி அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அடங்குவதற்குள் பேராவூரணி அருகேஅதே காரணத்துக்காக இளம் விவசாயி ஒருவர் தன் வயலில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பா பயிர்கள் கருக ஆரம்பித்ததைத் தொடர்ந்த காவிரி டெல்டா விவசாயிகள் அதிர்ச்சியால் இறப்பதும்,தற்கொலை செய்து வருவதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நேற்று முன்தினம் கூட திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தன் நிலத்தில் கருகிய சம்பாபயிர்களைக் கண்டு அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு, அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த ஒரு விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பேராவூரணி பகுதியைச் சேர்ந்த விவசாயியனா சேகர் ரூ.5,000 வரை கடன் வாங்கி தன்னுடைய நிலத்தில் சம்பாபயிரிட்டிருந்தார். ஆனால் காவிரியில் நீர் விடாததைத் தொடர்ந்து அவருடைய வயலில் பயிரிடப்பட்டிருந்தசம்பா பயிர்கள் கருகத் தொடங்கின.
நேற்று தன் வயலுக்கு வந்திருந்த சேகர், அங்கிருந்த வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொந்தார். இதையடுத்துஅங்கிருந்த ஒரு மரத்தில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
சம்பா பயிர்கள் கருகியதால் இளம் விவசாயியான சேகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேராவூரணிபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications