பெண் சிசுக்களை விற்பனை செய்யும் பெற்றோர்: சேலம் அருகே "பகீர்"
சேலம்:
சேலம் அருகே தத்துக் கொடுக்கிறோம் என்ற பெயரில் தங்களுக்குப் பிறந்த பெண் சிசுக்களை பெற்றோர்களேரூ.5,000 வரை விற்கும் கொடூரம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் முன்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்தான் பெண் சிசுக் கொலைகள் சர்வ சாதாரணமாக நடந்துவந்தன. ஆனால் சமீப காலத்தில் சேலம் மாவட்டம் கொளத்தூரில் பெண் சிசுக் கொலைகள் அதிகரித்துவருவதாகத் தெரிகிறது.
மேலும் தமிழகத்திலேயே சேலம் மாவட்டத்தில்தான் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்சிசுக்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டம் கொளத்தூர் பஞ்சாயத்து ஒன்றியத்தைச் சேர்ந்த பல கிராமங்களில் பெற்ற பெண்குழந்தைகளையே பெற்றோர் விற்று வரும் செய்திகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
குறைந்தபட்சம் ரூ.2,500 முதல் பெண் சிசுக்கள் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிகபட்சமாக ரூ.5,000 வரைசெலவழித்து பெண் சிசுக்களை வாங்கிச் செல்பவர்களும் உள்ளனராம்.
மேலும் இந்தப் பெண் சிசுக்களை வாங்கிச் செல்வதற்கென்றே நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் அடிக்கடிகொளத்தூருக்கு வந்து செல்லுமாம்.
பிரசவத்திற்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்துஉதவிகளையும் அந்தக் கும்பலே செய்து கொடுக்கிறது. பின்னர் பெண் குழந்தை பிறந்தால் அதை விலைக்கு வாங்கபெற்றோரிடமே அந்தக் கும்பல் பேரம் பேசுமாம்.
பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செலவாகும் என்று கருதும் பெற்றோரும் அந்தக் கும்பலின்பேச்சுக்கு மயங்கி, பிறந்து 10 நாட்களுக்குள்ளாகவே தங்கள் பெண் சிசுவை விற்று விடுகின்றனர்.
சமீபத்தில் கொளத்தூரை அடுத்துள்ள பங்களாகாட்டைச் சேர்ந்த பழனிசாமி-நல்லம்மாள் தம்பதிக்குப் பிறந்த 5நாட்களே ஆன பெண் சிசுவை விலைக்குக் கொடுக்குமாறு பேரம் பேசியுள்ளது அந்தக் கும்பல். ரூ.2,500 மட்டுமேதர முடியும் என்றும் அது கூறியுள்ளது.
ஆனால் நல்லம்மாளின் தாயாரான வெள்ளையம்மாள் அந்தப் பெண் சிசுவை விற்கவே கூடாது என்றும் நாமேவளர்த்துக் கொள்வோம் என்று பிடிவாதம் பிடித்ததால், அந்தக் குழந்தை விற்கப்படாமல் தப்பித்து விட்டது.
இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் இப்பகுதியில் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு வாங்கும் பெண் சிசுக்களை அந்தக் கும்பல் வளர்க்கிறார்களா அல்லது மும்பை போன்ற சிலநகரங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ விற்று விடுகிறார்களா என்றுதான் தெரியவில்லை.
இது தொடர்பாக கொளத்தூர் பகுதியில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் இயக்குநரானசம்பத்குமார் கூறுகையில், பெண் சிசுக்களைக் கொல்வதும், விற்பதும் சமூக அநீதியாகும். இதைத் தடுக்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications