ஒரு நம்பர் லாட்டரி விற்ற 6 பேர் கைது
சென்னை:
சென்னையில் தடையை மீறி ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்களை விற்ற 6 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில் தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நம்பர் லாட்டரிச்சீட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை-வியாசர்பாடி பகுதியில் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனை நடந்து வருவதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது வெளிமாநில ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்கள் ஒரு இடத்தில் விற்பனை செய்வது தெரிய வந்தது.மிசோரம் மற்றும் சிக்கிம் மாநில ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்களை சிலர் விற்று வந்தனர்.
இதையடுத்து ஜான்சன், ஏழுமலை, சண்முகம், சேகர், கிரி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய ஆறு பேரையும் போலீசார்கைது செய்தனர். அவர்கள் விற்று வந்த ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications