செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம்: ஜி.கே. மணி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரத்தில் நீதிபதியைத் தாக்க முயற்சித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டபா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட 42 பேர் மீதும் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள செங்கல்வராயன் அறக்கட்டளையை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிதலைமையின குழுவினரை பதவியேற்க விடாமல் பாமவினர் தடுத்தனர்.
வன்னியர் தவிர வேறு ஜாதியினர் யாரும் இந்த அறக்கட்டளையை நிர்வகிக்கக் கூடாது என்று கூறி மணியும், பாமகஎம்.எல்.ஏவான காடு வெட்டி குருவும் தகராறு செய்தனர். மேலும் நீதிபதியை கேவலமாகவும் பேசினர்.அவர்களுடன் இருந்த பிற பாமகவினர் நீதிபதியை தாக்கவும் முயன்றனர்.
இதையடுத்து தகராறு செய்த பா.ம.கவினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு வேப்பேரி காவல் நிலையத்துக்குசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட 42 பாமகவினர் மீதுகுற்றம் சாட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்ட நிலையில் மணியும், காடுவெட்டி குருவும்மட்டும் சில நாட்கள் தலைமறைவாக இருந்து பின்னர் சரணடைந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மணிக்குபின்னர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் தற்போது வெளியில்தான் உள்ளார்.
இந்நிலையில் மணி உள்ளிட்ட குற்றம் சாட்டபபட்ட 42 பேர் மீதும் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
வேப்பேரி காவல் நிலையப் போலீசார் இந்தக் குற்றப்பத்திரிக்கையை சென்னை-எழும்பூர் 6வது குற்றவியல்நீதிமன்றத்தில் நீதிபதி சாம்பசிவம் முன் தாக்கல் செய்தனர். இருப்பினும் குற்றப்பத்திரிக்கையின் நகல்கள்அவர்களிடம் வழங்கப்படவில்லை.
ஆயுதங்களுடன் வருதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி போன்ற ஏழுபிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் பத்திரிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட 42 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் இந்த வழக்கின்அடுத்தகட்ட விசாரணை மார்ச் 7ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications