சாத்தான்குளம்: 23 கிராமங்கள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிப்பு
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தொகுதியில் 23 கிராமங்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்துஅங்கு சிறப்புப் போலீசார் குவிக்கப்படவுள்ளனர்.
சாத்தான்குளம் தொகுதியில் வரும் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல்பரிசீலனை முடிந்துவிட்டது.
இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றுதான் கடைசி நாளாகும். மாலை 3 மணிக்கு மேல் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதற்கிடையே, சாத்தான்குளம் தொகுதிக்குள் அடங்கிய 23 கிராமங்களை பதற்றம் நிறைந்த பகுதிகளாக தேர்தல்கமிஷன் அறிவித்துள்ளது.
இந்தக் கிராமங்களில் நிலவும் அரசியல் மோதல்கள், முன்பகைகள், கோஷ்டி மோதல்கள் ஆகியவற்றைஅடிப்படையாக வைத்து இவை பதற்றம் நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து இந்தப் பகுதிகளில் சிறப்புக் காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர்தேர்தலையொட்டி கூடுதலாகக் குவிக்கப்படவுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications