காவிரியில் தமிழகத்துக்கு 4,500 கன அடி நீர் விட வாஜ்பாய் உத்தரவு
டெல்லி:
தமிழகத்துக்கு காவிரியில் மேலும் மூன்று நாட்களுக்கு தினமும் 4,5000 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு பிரதமர்வாஜ்பாய் உத்தரவிட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் (Cauvery tribunal) ஏற்கனவே கூறியுள்ள அளவுநீரை தமிழகத்துக்கு விட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஆனால், தமிழகத்தில் சம்பா பயிர் நன்றாக விளைந்திருப்பதாகவும் இதனால் நீர் விட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறிதமிழக விவசாயிகளின் வயிற்றெரிச்சலை கர்நாடகம் வாங்கிக் கொட்டியுள்ளது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 10ம் தேதி (இன்று) காவிரி ஆணையக் கூட்டம் (Cauvery river water authority) நடக்கும் வரை காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 4,500 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 6ம் தேதிகர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 7ம் தேதி மாலை முதல் கர்நாடம் கபினிஅணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிட்டது.
இன்று அந்த நீரை கர்நாடகம் நிறுத்தியது.
இந் நிலையில் இன்று காவிரி ஆணையக் கூட்டம் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் தமிழக முதல்வர்ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, கேரள முதல்வர் ஆண்டனி, பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர்பங்கேற்றனர்.
ஜெயலலிதா கோரிக்கை:
அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் சம்பா பயிர்களைக் காக்க மிகக் காலதாமதமாக கர்நாடகம் இப்போதுதிறந்துவிட்டு வரும் சொற்ப நீர் போதாது. கூடுதல் நீரை விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடகத்தின்பிடிவாதத்தால் தமிழக விவசாயிகள் விவரிக்க முடியாத அளவு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர் என்றார்.
இது தொடர்பாக ஒரு மனுவையும் ஜெயலலிதா பிரதமரிடம் வழங்கினார்.
ஆனால், கர்நாடக அணைக்கட்டுகளில் நீர் இல்லாததால் இதற்கு மேல் தமிழகத்துக்குத் தண்ணீர் விட முடியாது என கர்நாடகமுதல்வர் தனது வழக்கமான பல்லவியைப் பாடினார்.
பேச்சு நடத்த உத்தரவு:
அப்போது இடைமறித்த வாஜ்பாய், இது ஒரு மனிதகுலப் பிரச்சனை. இதில் இரு மாநில அரசுகளும் பரஸ்பர நம்பிக்கையுடன்பேச்சு நடத்தினால் தான் தீர்வு காண முடியும். இரு மாநில முதல்வர்களும் ஒற்றுமையுடன் பேசி பிரச்சனைக்கு உரிய தீர்வைக் காணவேண்டும்.
நாடு முழுவதுமே மிகப் பெரும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மழையில்லாமல் வறண்டு போய்விட்டது. இருமாநில விவசாயிகளின் வேதனையை மனதில் கொண்டு இப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.
கர்நாடகத்தின் பயிர்கள் கடந்த டிசம்பரிலேயே அறுவடை செய்யப்பட்டுவிட்டன. ஆனால், தமிழகத்துக்கு இந்த மாதமும் தண்ணீர்கிடைத்தால் தான் பயிர்கள் தப்பும். தமிழக விவசாயிகளின் சம்பா பயிரைக் காக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உண்டு.
நீர் விட ஆணை:
எனவே தமிழகத்துக்கு மேலும் மூன்று நாட்களுக்கு தினமும் 4,500 கன அடி நீரை கர்நாடகம் விட வேண்டும். 4வது நாள் முதல்ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளபடி நீரை விட வேண்டும் என்றார் வாஜ்பாய்.
காவிரி நடுவர் மன்றம் ஒவ்வொரு வாரமும் தமிழகத்துக்கு எவ்வளவு நீரை கர்நாடகம் விட வேண்டும் என்று ஒருஅட்டவணையைத் தயார் செய்து கொடுத்துள்ளது. கர்நாடகத்தில் அணை மட்டம், மழை அளவு, தமிழகத்தின் மழை,தமிழகத்தின் நீர்த் தேவை, வானிலை இதை வைத்து அந்த அட்டவணை (time-table) தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. நீரை கர்நாடகம் நீரைத் தர வேண்டும். ஒவ்வொரு வாரமும் இவ்வளவு நீர்என்று பிரித்துத் தரப்பட்டுள்ளது. ஆனால், இந்த அட்டவணையை கர்நாடகம் மதித்ததாக வரலாறே இல்லை.
கிருஷ்ணாவின் பொறுப்பில்லா பேச்சு:
இக் கூட்டம் முடிந்தபின்னர் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா,
தமிழகத்துக்கு நீர் விட வேண்டும் என்ற பிரதமர் வாஜ்பாயின் உத்தரவு தவறானது. இது எங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை.ஆனால், இந்த உத்தரவை நாங்கள் அமல்படுத்தித் தான் ஆக வேண்டும். இதனால் கர்நாடகத்தில் வன்முறை ஏதும் வெடிக்காமல்இருக்க வேண்டும்.
எனக்குக் கிடைத்த தகவலின்படி தமிழகத்தில் சம்பா பயிர் அறுவடை செய்யப்பட்டுவிட்டது (!) அல்லது சில இடங்களில்அறுவடைக்காக முற்றிலும் தயார் நிலையில் வளர்ந்து நிற்கிறது. இப்போது தமிழகம் நீர் கேட்பது அடுத்த பயிருக்காக நீரைசேமித்து வைக்கத் தான் என்றார் கிருஷ்ணா.
பேச்சு நடத்தினாலும் பலனில்லை..
கிருஷ்ணாவின் பொறுப்பற்ற தன்மையால் தான் தமிழக விவசாயி எலி, நண்டை சாப்பிடுகிறான். தட்டேந்தி நிற்கிறான். அவனதுபயிர் விளைந்து நிற்பதாக அண்டப் புளுகு விடுவது மனிதாபிமானமுள்ள யாரும் சொல்லும் சொல் அல்ல.
தமிழக பயிர்களைக் காப்பாற்ற வாஜ்பாய் அறிவித்துள்ள இந்த நீர் நிச்சயம் போதுமானதாக இருக்காது. ஆனால், இதை ஒருஇடைக்காலத் தீர்வாகவே பிரதமர் அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் இரு மாநில முதல்வர்களும் விரைவில் பேச்சுநடத்தி தீர்வு காண வேண்டிய அவசியத்தை வாஜ்பாய் ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால், தமிழக நிலை நன்றாகத் தெரிந்தும் பொய் பேசும் கிருஷ்ணாவிடன் பேசி என்ன பலன் ஏற்படும் என்று தெரியவில்லை.
ஆனால், பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் அல்லது வாஜ்பாய் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இப்போது இரு மாநில அரசுகளையும் பேச்சு நடத்துமாறு வாஜ்பாய் கூறியுள்ளதால் அதற்குக் கட்டுப்படவேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.
வந்தனர் 4 முதல்வர்கள்:
வாஜ்பாய் கூட்டிய காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பகல் 1மணிக்கு தனிவிமானத்தில் டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷும் உடன் சென்றார்.
முன்னதாக சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பொதுப்பணித்றை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிகாரிகள் டெல்லிசென்றனர். அதே விமானத்தில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும் டெல்லி சென்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, கேரள முதல்வர் ஆண்டனி ஆகியோர் இன்று காலையே டெல்லி சென்றுவிட்டனர்.
ஓரிரு மாநில முதல்வர்கள் வராமல் உரிய "கோரம்" இல்லாவிட்டாலும் ஆணையக் கூட்டத் நடத்தியே ஆகவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த இரு முறையும் காவிரி ஆணையக் கூட்டம் கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. ஒருமுறைஜெயலலிதாவும் இன்னொரு முறை ரங்சாமியும் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளாமல் போனதால் கூட்டம்நடக்காமல் போனது.
உச்ச நீதிமன்ற உத்தரவால் இன்று 4 முதல்வர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டனர்.
தனி விமானத்தில் சொகுசு பயணம்:
டெல்லிக்கு தினமும் சென்னையில் இருந்து 2 விமானங்கள் இருந்தும் அவற்றைப் புறக்கணித்துவிட்டு தனி விமானத்தில் முதல்வர்ஜெயலலிதா சென்றார். தனி விமானத்திலேயே அவர் சென்னை திரும்புவார்.
இதை திமுக தலைவர் கருணாநிதி வன்மையாக கண்டித்துள்ளார்.
அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறிவிட்டு, மாவட்டந்தோறும் ஆடம்பர விழாக்களை நடத்துவதையும்,டெல்லிக்குச் செல்ல காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என இரண்டு விமானங்கள் இருந்தும், தனியார் விமானத்தைவாடகைக்குப் பிடித்து அதில் தனியாக டெல்லி செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
இதைப் பார்க்கையில், தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறது என்று பைத்தியக்காரர்கள் கூட கூறமாட்டார்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-->












Click it and Unblock the Notifications