உலக கோப்பை கிரிக்கெட்: ஷான் வார்னே வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி (ஆஸ்திரேலியா):

தடை செய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டதற்காக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னேஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான வார்னே கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் தோள்பட்டையில் ஏற்பட்டகாயம் காரணமாக சிரமப்பட்டு வந்தார். இதனால் அவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவாரா என்றசந்தேகம் எழுந்தது.

ஆனாலும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே அவருடைய தோள்பட்டை வலி விரைவில் சரியாகிவிட்டதைத் தொடர்ந்து உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணியில் அவர் சேர்க்கப்பட்டார். உலகக் கோப்பைபோட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவிற்கும் வந்து சேர்ந்தார்.

இன்று பாகிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலிய அணி மோதும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் போதை மருந்துசாப்பிட்டுள்ளனரா என்பதைக் கண்டறியும் சோதனை நடந்தது. அப்போது வார்னே தடை செய்யப்பட்ட போதைமருந்தை சாப்பிட்டிருந்தது தெரிய வந்தது.

தோள்பட்டை வலியை சரி செய்வதற்காக அவர் சாப்பிட்ட மருந்தில்தான் இந்த போதைப் பொருள்கலந்திருந்ததாகத் தெரிய வந்துள்ளது. அது தடை செய்யப்பட்ட போதைப் பொருள்தான் என்பது அவருக்கேதெரியாது.

இதையடுத்து உலகக் கோப்பை போட்டிகளில் வார்னே விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இன்று இரவே ஆஸ்திரேலியா திரும்புவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போதைய உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னர் அவர் ஓய்வு பெறப் போவதாகவும்அறிவித்திருந்தார்.

ஆனால் பாகிஸ்தானுடனான முதல் போட்டி துவங்குவதற்குச் சற்று முன் அவர் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்தொடரிலிருந்தே வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் உட்கொள்ளும் வீரர்கள் போட்டிகளை விட்டு நீக்கப்படும் முறையை சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில்தான் அறிமுகம் செய்திருந்தது. அதன்படி கிரிக்கெட் போட்டிகளிலிருந்துவெளியேற்றப்படும் முதல் வீரர் வார்னே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா சென்றதும் மீண்டும் ஒருமுறை தன் ரத்தத்தைப் பரிசோதனை செய்து கொள்ளவுள்ளார் வார்னே.அவர் உட்கொண்டது தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இல்லை என்று தெரிய வந்தால் அவரை மீண்டும்உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட அனுமதிப்பது குறித்து ஐ.சி.சியிடம் கோரிக்கை விடுப்போம் என்றுஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த 1999ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி கோப்பையைத் தட்டிச்செல்வதில் வார்னே முக்கியப் பங்கு வகித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+