ஹஜ் நெரிசலில் சிக்கி 3 இந்தியர்கள் உள்பட 14 பேர் சாவு
மினா:
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 புனித யாத்ரீகர்கள் பலியாயினர். இதில் மூன்று பேர்இந்தியர்களாவர்.
ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்ச்சியான சாத்தான் (தூண்கள்) மீது கல் எறியும் நிகழ்ச்சி நேற்று மினாவில் நடந்தது. அப்போது அங்குலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் கூடினர். இதில் ஒரு குழிவினர் கல் எறிந்துவிட்டுத் திரும்பினர். இதையடுத்து அடுத்த குழு அப் பகுதிக்குள்நுழைந்தது.
ஒவ்வொரு குழுவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில்சிக்கி 14 பேர் இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
இறந்த இந்தியர்களில் 2 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. ஒருவர் சாந்த் பீ. இன்னொருவர் சர்பார் பத்மி.
கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் திரண்டிருந்ததால் அப் பகுதியில் சாலைகள், மேம்பாலங்கள் அனைத்தும் நிரம்பி வழித்தன. வாகனங்கள் செல்லவழியே இல்லை. இதனால் சம்பவம் நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியவில்லை.
மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் இருந்தும் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு ஜன நெருக்கடி இருந்தது.இதனால் ஹெலிகாப்டர்களைக் கொண்டு தான் கண்காணப்புப் பணி நடந்தது.
இந்த கல் எறியும் நிகழ்ச்சி மேலும் இரு நாட்களுக்கு நடக்கும். நேற்றைய சம்பவத்தையடுத்து சாத்தான்களை அடாையளமாகக் கொண்ட 3தூண்களின் அருகிலும் 8 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபிய அரசு தொடர்ந்து வசதிகளை அதிகரித்து வந்தாலும் கூட யாத்ரீகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பல மடங்குஅதிகரித்து வருவதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications