காவிரியில் 4,500 கன அடி நீர் விட்டதாக கர்நாடகம் பொய்
சேலம்:
காவிரியில் கர்நாடகம் வெளியில் அறிவித்தபடி உரிய நீரை விடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 7ம் தேதி முதல் தமிழகத்துக்கு தினமும் 4,500 கன அடி நீர் திறந்துவிட்டதாகவும், பின்னர் 11ம் தேதிகாவிரி ஆணையக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டபடி மீண்டும் தினமும் 4,500 கன அடி நீரைத் திறந்துவிட்டு வருவதாகவும்கர்நாடகம் கூறியது.
இந்த நீரைக் கொடுத்துவிட்டு நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றரீதியில் முகத்தை சுளித்தார் கிருஷ்ணா.
ஆனால், அவரது பேச்சு முழுவதுமே நாடகம் என்பது தெளிவாகிவிட்டது. 7ம் தேதி திறந்துவிடப்பட்டதாகக் கூறப்படும் நீர் நேற்று வரைமேட்டூர் அணைக்கு வரவே இல்லை. இதனால், கர்நாடகம் உண்மையிலேயே 4,500 கன அடி நீர் விட்டதா என்பதேசந்தேகத்துக்குள்ளானது.
இன்று வரை நீர் வராமல் போனதால் மிகக் குறைவான நீரையே கர்நாடகம் திறந்துவிட்டுவிட்டு 4,500 கன அடி விட்டதாக பொய்சொல்வது உறுதியாகிவிட்டது. இப்போது மேட்டூர் அணைக்கு வெறும் 671 கன அடி நீர் தான் வருகிறது. இது தமிழக நீர்ப் பிடிப்புப்பகுதியில் இருந்து வரும் நீராகும்.
கபினியில் இருந்து மேட்டூருக்கு நீர் வர 3 நாட்கள் ஆகும். ஆனால், 6 நாட்கள் கடந்துவிட்டபோதிலும் நீர் வந்து சேரவில்லை. நேற்று இரவு845 கன அடி வந்த நீர் இன்று 671 அடியாகிவிட்டது. இதனால் கர்நாடகம் சொன்னபடி நீரை விடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
மிகக் குறைவான நீரையே கர்நாடகம் திறந்துவிட்டுள்ளதால் நீரின் ஓட்டம் மிகக் குறைவாக இருப்பதாகவும் அது மேட்டூர் வர இன்னும் 24மணி நேரம் ஆகலாம் என்றும் தெரிகிறது. இந்த சொற்ப நீரால் தமிழகத்தில் 20 சதவீத சம்பா பயிரைக் கூட காக்க முடியாது எனவிவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
தமிழகத்தை எதிர்த்து நடை பயணம்:
இதற்கிடையே காவிரியில் நீர் விட்டது நியாயமில்லை என்று கூறி தமிழகத்துக்கு எதிராக மாண்டியாவில் இருந்து பெங்களூருக்குநடைபயணம் நடத்த கர்நாடக விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
விவசாயிகள் சங்கத் தலைவர் மாடே கெளடா தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு மிக அதிகமான நீர் விடப்பட்டுள்ளது.தமிழகத்துக்குத் தண்ணீர் விட்ட கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
நீரையே விடாமல் இவர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications