காதல் மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள்
சென்னை:
மனைவியை கொடுமைப்படுத்தி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது.
சென்னை பாடி குமரன்நகரைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இருவரும் காதலித்துத்திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடிப்பழக்கம் கொண்ட ரகுநாதன் வீட்டுச் செலவுகளுக்குப் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். பணம் கேட்டால்மனைவியை அடித்து, உதைத்து வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வீட்டுச் செலவுக்காக ரூ.20 பணத்தைக் கொடுத்துள்ளார்ரகுநாதன். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்டுள்ளார் சாமுண்டீஸ்வரி.
இதனால் கோபமடைந்த ரகுநாதன் மனைவியை சரமாரியாக அடித்துள்ளார். ஆபாசமாகவும் திட்டியுள்ளார்.இதனால் வெறுப்படைந்த சாமுண்டீஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டார். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
நீ என்ன தற்கொலை செய்வது, நானே உன்னைக் கொன்று விடுகிறேன் என்று கூறிய ரகுநாதன், தீக்குச்சியைப்பற்றவைத்து மனைவி மீது வீசினார்.
இதனால் உடலில் தீப் பிடித்துக் கொண்ட சாமுண்டீஸ்வரி கருகினார்.
உடனடியாக அண்டை வீட்டினர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குஅவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் தனது கணவர்தான் தன்னை தீவைத்து எரித்ததாகக் கூறினார்.
இதையடுத்து ரகுநாதன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி விமலா சாமுண்டீஸ்வரியின் மரண வாக்குமூலத்தையும் போலீஸ்விசாரணையையும் அடிப்படையாக வைத்து ரகுநாதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications