பவானி: தமிழக கோரிக்கையை நிராகரித்தது கேரளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை & திருவனந்தபுரம்:

பவானி ஆற்றில் அணை கட்டுவதை நிறுத்தும் விவகாரத்தில் நேற்று தமிழக அமைச்சர்கள் குழு கேரளஅமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

ஆனால், அணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க கேரளம் ஒப்புக் கொண்டதாக தமிழக அரசு நேற்று நள்ளிரவில்அறிக்கை விட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் இந்தக் கருத்தை கேரளம் உறுதி செய்யவில்லை.

பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் தடுப்பு அணைக் கட்டும் பணிகளை கேரளம் ஆரம்பித்துள்ளது.இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பல லட்சக் கணக்கானமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இத் திட்டத்தை தமிழகம் எதிர்க்கிறது.

இப்பிரச்சனை தமிழக அமைச்சர்கள் குழு திருவனந்தபுரம் சென்று கேரள அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்துப்பேசியது. பன்னீர்செல்வம், பொன்னையன், ஜெயக்குமார் ஆகிய தமிழக அமைச்சர்களும் தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷ், நிதித் துறை செயலாளர் நாராயணன், பொதுப்பணித் துறை செயலாளர் குற்றாலிங்கம்உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் பேச்சுவார்த்தைரளில் கலந்து கொண்டனர்.

கேரளத்தின் சார்பில் நீர்பாசனத்துறை அமைச்சர் ஜேக்கப் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் இதில்பங்கேற்றனர்.

இதில் எந்த முக்கிய உடன்பாடும் ஏற்படவில்லை.

கேரளம் விளக்கம்:

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிருபர்களிடம் ஜேக்கப் கூறுகையில்,

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைதான் கட்டப்படுகிறது. 20,000 மக்களின் குடிநீர் தேவைக்காக 0.18 டி.எம்.சி.நீரை மட்டுமே இதில் தேக்க முடியும். குடிநீர் தவிர, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 2,000 ஏக்கர் நிலத்துக்கானநீர்ப்பாசனத் தேவையையும் இந்த அணை பூர்த்தி செய்யும்.

சுமார் 2 மீட்டர் உயரமும், 60 மீட்டர் நீளமும் கொண்டு ரூ.2.85 கோடி செலவில் இந்தத் தடுப்பணைஅமைக்கப்படவுள்ளது. இதில் மூன்று மதகுகள் இருக்கும்.

இந்தத் தடுப்பணை கட்ட வேண்டியதன் அவசியத்தை தமிழக அரசிடம் விளக்கமாகக் கூறியுள்ளோம். அதைத்தமிழக அரசு ஏற்கும் என்றும் நம்புகிறோம்.

பரம்பிக்குளம்-ஆழியாறு நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநில நிபுணர்களும் வரும் மார்ச் 31ம்தேதிக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பின்னர் இரு மாநில அமைச்சர்களும் மீண்டும்சந்தித்து இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசுவோம்.

முல்லை-பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்கும் உயரத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்ததமிழக அரசு விரும்புகிறது. ஆனால் இந்த அணை 100 ஆண்டுகள் பழையது என்பதால், இந்தத் திட்டத்தால்அணைக்கும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஆபத்து நேரும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றத்திற்கு வெளியேயும்தமிழக அரசுடன் பேசி இப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்றார் ஜேக்கப்.

ஆனால், பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார்.

தமிழக அரசு முரணான கருத்து:

இந் நிலையில் சென்னை திரும்பிய தமிழக உயர் மட்டக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பவானி ஆற்றுப் பிரச்சினை குறித்த மிகவும் முக்கியமான தகவல்களை இரு மாநில அரசுகளும் பகிர்ந்து கொண்டன.

முக்காலியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை குறித்த விவரங்களை கேரள அரசு விரிவாகத் தெரிவித்தது. அதேபோல, பவானி ஆற்றை நாம் எந்தெந்த பணிகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம் என்பதையும் அவர்கள் கேட்டுத்தெரிந்து கொண்டனர்.

இறுதியாக, மார்ச் 6ம் தேதி நடைபெறும் காவிரி நடுவர் மன்ற விசாரணைக்குப் பின்னர் எடுக்கப்படும்முடிவுக்கேற்ப செயல்படுவது என்றும் அதுவரை பவானி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை நிறுத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பவானி தவிர, இரு மாநிலங்களுக்கும் இடையிலான மின்சாரம் மற்றும் நீர்ப் பகிர்வு தொடர்பான பல்வேறுபிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது என்று அந்தச் செய்திக் குறிப்பில்கூறப்பட்டிருந்தது.

கேரள அமைச்சர் ஜேக்கம் கூறிய கருத்துக்கு மாறானதான தமிழக அரசின் விளக்கம் அமைந்துள்ளது.

பன்னீருக்கு ரூம் இல்லை:

முன்னதாக திருவனந்தபுரம் சென்று இறங்கிய பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு கேரள அரசு விருந்தினர் இல்லத்தில் அறை ஒதுக்குவதில்சிக்கல் உண்டானது. அவர் பெயரில் ரூம் ஏதும் புக் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழக- கேரள அதிகாரிகள் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இதன் பின்னர் கேரள உயர் அதிகாரிகள் ஓடி வந்து பிரச்சனையைத்தீர்த்ததாகக் கூறப்படுகிறது. கீழமட்ட அதிகாரிகள் செய்த தவறினால் தான் இச் சம்பவம் நடந்துவிட்டதாக பன்னீரிடம் உயர் அதிகாரிகள்விளக்கமும் தந்து, வருத்தமும் தெரிவித்தனர்.

தனது வழக்கமான சிரிப்புடன் இப் பிரச்சனையை பெரிதாக்காமல் விட்டுவிட்டார் பன்னீர்.

ஜெயலலிதாவின் படங்களுடன் அமைச்சர்களின் கார்கள் வந்து சேர அதை கேரள நிருபர்கள் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். மலையாளசேனல்கள் அமைச்சர்களின் கார்களில் ஜெயலலிதாவின் படம் இருப்பதை படமெடுத்து ஒளிபரப்பின.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+