பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கிரனைட் குண்டு: ஒருவர் கைது
லண்டன்:
வெனிசுவேலாவில் இருந்து லண்டனுக்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு பயணி கிரனைட் வெடிகுண்டு வைத்திருந்தார். அவர்லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் விமானத் தாக்குதல்களுக்குப் பின்னர் உலகின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்புஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. பயணிகளும் உடமைகளும் முழு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந் நிலையில் பிரிட்டன் விமான நிலையங்கள் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அந் நாட்டின் எம்-15 ரகசியபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் நேற்று முன் தினம் மூடப்பட்டது.
இந்த விமான நிலையத்தைச் சுற்றி ராணுவ டாங்கிகளும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல பிரிட்டனின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று வெனிசுவேலா தலைநகர் காரகசில் இருந்து கேட்விக் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டபோது ஒரு பெட்டியில் கிரனைட் வெடிகுண்டுஇருந்தது.
விமானத்தில் அது எப்படி வெடிக்காமல் போனது என்று தெரியவில்லை. நடுவானில் இந்த குண்டு வெடித்திருந்தால் விமானம்சிதறியிருக்கும். இதில் வந்த 128 பயணிகளும் பலியாகியிருப்பர்.
இதையடுத்து இந்தக் குண்டு இருந்த பெட்டிக்கு உரிமையாளரான 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பங்களாதேஷைசேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இச சம்பவத்தையடுத்து கேட்விக் விமான நிலையம் நேற்றிரவு 5 மணி நேரம் மூடப்பட்டது. புறப்படத் தயாராக இருந்த அனைத்துவிமானங்கள் நிறுத்தப்பட்டன. மீண்டும் முழுச் சோதனைகளுக்குப் பின்னரே விமானப் போக்குவரத்து தொடங்கியது.
வெனிசுவேலாவில் புறப்பட்ட அந்த விமானம் பார்படோஸ் மற்றும் சில இடங்களில் நின்றுவிட்டு வந்துள்ளனது. கிரனைட் குண்டைக்கொண்டு வந்த நபர் எங்கு ஏறினார் என்று தெரியவில்லை.
இச் சம்பவத்தையடுத்து வெனிசுவேலாவுக்கு அனைத்து விமான சேவைகளையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ரத்து செய்துவிட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications