ஜெ. சொத்துக் குவிப்பு: விசாரணைக்கே தடை கோரி திமுக புதிய வழக்கு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது வருமானத்தை மீறி ரூ. 62 கோடிக்கு சொத்து குவித்த வழக்கில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர் அரசு வக்கீல் நியாயமான விசாரணை நடத்தவில்லை என்று கூறி இந்த வழக்கு விசாரணைக்கே தடை கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் அதிமுக, அரசு வழக்கறிஞரை நியமித்த பிறகு நடந்த அனைத்து விசாரணைகளையும் ரத்து செய்யுமாறும் திமுககோரியுள்ளது. இது தொடர்பாக திமுக தொழிற்சங்கத்தின் தலைவர் குப்புசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவித்த வழக்கு முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வந்த அனைத்து அரசுவழக்கறிஞர்கள் ராஜினாமா செய்துவிட்டனர்.
இதையடுத்து அதிமுக அரசு புதிதாக வழக்கறிஞர்களை நியமித்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் சந்திரசேகரனை அரசுவழக்கறிஞராக முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.
ஆட்சியில் உள்ள ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில்விசாரணை நடத்த மாட்டார்கள் என எதிர்க் கட்சிகள் அப்போதே குற்றம் சாட்டின.
இதனால் இந்த வழக்கையே வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக சந்திரசேகரன் சரியாக வழக்கை நடத்தவில்லை என்றும், அவருக்குப்பதிலாக தனிப்பட்ட, சுதந்திரமான வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரி திமுக சார்பில் குப்புசாமி ஒருவழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு உயர் நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச் முன் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கை தனி நீதிமன்றத்தில் மிக வேகமாக நடத்தி வருகிறது. திமுக ஆட்சியில்ஜெயலலிதாவிடம் சொத்து குறித்து விசாரணை நடத்திய நல்லம்ம நாயுடு சாட்சியம் அளித்து வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக அவர் சாட்சியம் அளித்து வருவதால் நீதிமன்றத்திலேயே அரசு வழக்கறிஞர் சந்திரசேகரனுக்கும்அவருக்கும் இடையே காரசாரமான சண்டை ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில் சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட பிறகு இந்த நீதிமன்றத்தில் நடந்த அனைத்து விசாரணைகளையும் ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்குப் போடப்பட்டுள்ளது.
அதில் திமுக தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமி கூறியிருப்பதாவது:
அரசு வக்கீல் சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கே அழிக்கப்பட்டுவிடும்ஆபத்து உருவாகியுள்ளது. ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட சாட்சிகளை வரவழைத்து சந்திரசேகரன் விசாரணைநடத்தியுள்ளார். அப்போது பலரும் முன்பு சொன்ன கருத்தை மாற்றி பல்டி அடித்துள்ளனர். ஆனால், அவர்களை பல்டிசாட்சிகளாக அறிவிக்கவில்லை.
ஜெயலலிதாவை விசாரித்த நல்லம்ம நாயுடு சாட்சியளிக்கையில், தன்னிடம் அரசு வக்கீல் ஆவணங்களையே காட்டமறுப்பதாகக் கூறியுள்ளார். இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கில் அரசு எந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்திவழக்கையே அழிக்கப் பார்க்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
எனவே, இந்த அரசு வக்கீல் நியமிக்கப்பட்ட பின்னர் நடந்த அனைத்து விசாரணைகளையும் ரத்து செய்து, புதிதாக விசாரணைநடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு திமுக தனது மனுவில் கூறியுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரணையைவரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. வேறு வழக்கறிஞரை நியமிக்கக் கோரி குப்புசாமி போட்ட முதல் வழகும் இந்த பெஞ்சிடம்தான் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications