காந்த உள்ளாடைகள்: மலேசிய தமிழர், பெண் உள்பட 4 பேர் கைது
சென்னை:
காந்தப் படுக்கை மோசடி அடங்குவதற்குள் மற்றொரு காந்த மோசடி அம்பலமாகியுள்ளது. போலி காந்தஉள்ளாடைகளை விற்பனை செய்தது தொடர்பாக மலேசியத் தமிழர், பெண் உள்பட 4 பேரைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மலேசியாவைச் சேர்ந்தவர் தசரதராஜ். இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். காந்தத்தால் ஆன பிரா,ஜட்டி, பெல்ட் ஆகியவற்றை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்வதாக விளம்பரம் செய்தார்.
இதை நம்பிய ஏராளமான மக்கள் இந்தப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கினர். மருத்துவ குணம்கொண்டதாகக் கூறப்பட்டதால், இந்த உள்ளாடைகள் அதிக அளவில் விற்பனை ஆகின.
இந்நிலையில் சமீபத்தில் காந்தப் படுக்கை மோசடி குறித்த செய்திகள் வெளியாயின. இது தொடர்பான போலீஸ்விசாரணையின்போதுதான் போலீசாருக்கு தசரதராஜின் காந்த உள்ளாடைகள் நிறுவனம் குறித்துத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து சென்னை-தி. நகரில் உள்ள அவருடைய நிறுவனத்தில் குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தியபோதுதான் குட்டு வெளிப்பட்டது. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட காந்த உள்ளாடைகள் அனைத்தும்போலியானவை என்பதும் தெரிய வந்தது.
அவற்றில் காந்த சக்தியும் இல்லை, மருத்துவ குணமும் இல்லை என்றும் தெரிய வந்தது. இந்திய மருத்துவக்கவுன்சிலின் சான்றிதழோ அல்லது மலேசிய மருத்துவக் கவுன்சிலின் சான்றிதழோ இல்லாமலேயே தசரதராஜ் இந்தமோசடியில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் அவர் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தசரதராஜ், பூவன், உமா சரவணன் மற்றும் ஷோபனா பீட்டர் என்ற பெண் ஆகிய நான்கு பேர்கைது செய்யப்பட்டனர். அந்த நிறுவனத்தில் இருந்த ஏராளமான காந்த உள்ளாடைகளையும் போலீசார்கைப்பற்றினர்.
இது தொடர்பாக மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications