மேட்டூர் அணையை நிரப்புவதாக "புருடா" விட்ட போலி சாமியார் "எஸ்கேப்"
மேட்டூர்:
தனது தவ வலிமையால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி மேட்டூர் அணை நிரம்பி வழியும் வரை மேட்டூரைவிட்டு செல்லமாட்டேன் என்று கூறி வந்த சென்னை நகரைச் சேர்ந்த சாமியார் தனது தவம் பலிக்காததால்மேட்டூரைக் காலி செய்துவிட்டு எங்கோ ஓடிவிட்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் ரத்தின சபாபதி சுவாமிகள். இவர் தன் மனைவியோடு கடந்த ஜனவரி 18ம் தேதிமேட்டூர் வந்தார். தான் தவம் செய்யப் போவதாகவும், தனது தவ வலிமையால் மேட்டூர் அணை நிரம்பி வழியும்என்றும் தனக்கு தவம் செய்ய மேட்டூர் அணையில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கைக்கு அரசு அனுமதி தரவில்லை. இதையடுத்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கிதனது தவத்தைத் தொடங்கினார் சுவாமிகள். ஜனவரி 23ம் தேதி மேட்டூர் அணை நிரம்பி வழியும் என்று நாளையும்குறிப்பிட்டு அவர் சொன்னார்.
இதனால் மேட்டூர் மக்களிடையே பெரும் ஆவலும் பரபரப்பும் ஏற்பட்டது. சுற்றுப் பகுதிகளில் உள்ளகிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுவாமிகளைத் தரிசிக்க மேட்டூர் வந்தனர்.
இந்நிலையில் ஜனவரி 23ம் தேதி வந்தது. ஆனால் மழைதான் வரவில்லை. தான் குடியிருக்கும் வீடு சரியில்லைஎன்று கூறிய சுவாமிகள், 24ம் தேதி வேறு வீட்டுக்கு மாறினார். அப்போதும் மழையைக் காணோம்.
இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி மேட்டூரில் லேசான மழை பெய்தது. அவ்வளவுதான், இதற்குக் காரணம்சுவாமிகள்தான் என்று அவரது உதவியாளர் வேங்கை அய்யனார் அறிக்கை விட்டார்.
ஆனால் மேட்டூரில் மட்டுமல்லாது சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அன்று அதே நேரத்தில் லேசானமழை பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் தெரிவித்தனர். இதனால் சுவாமிகளின் வாதம்செல்லவில்லை.
இந்தச் சூழ்நிலையில் திடீரென்று அந்த சுவாமிகளைக் காணவில்லை. அவர் தன் குழுவினருடன் மேட்டூரை விட்டேசென்றுவிட்டதாகத் தெரிகிறது. அவர் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை என்பதால் அவரைத் தேடும் பணியைபோலீஸாரும் மேற்கொள்ளவில்லை.
மழைவரும், மழைவரும் என்று கூறி தங்களை சுவாமிகள் ஏமாற்றி விட்டதாக மேட்டூர் மக்கள் தங்களுக்குள்ளேயேகூறிப் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications