நதிகள் இணைப்புப் பணி 2004ல் தொடங்கும்
புனே:
நாட்டின் அனைத்து தேசிய நதிகளையும் இணைக்கும் பணி 2004ம் ஆண்டில் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள நதிகள் இணைப்பு திட்டப் பணிக் குழுவின் தலைவர் சுரேஷ் பிரபு புனேவில் நிருபர்களிடம்பேசுகையில்,
நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு எந்த மாநில அரசும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. நதிகளை இணைப்பது சாத்தியமா என்பது குறித்தஆய்வு முடியும் நிலையில் உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் இது சாத்தியமே என்று தெரியவந்துள்ளது.
அனைத்துக் கட்சிகளும், மாநில அரசுகளும் இந்த இணைப்புத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இத் திட்டத்தால் சுற்றுச் சூழலுக்கும்எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்.
இத் திட்டம் தொடர்பாக செயற்கைக் கோள் மூலமான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. நதிகள் இணைப்புக்கு பணம் பிரச்சனையாகஇருக்காது. கடன், சிறப்பு வரிகள், மற்றும் பிற கட்டணங்கள் மூலம் இத் திட்டத்துகான நிதியைத் திரட்டிவிட முடியும். இத் திட்டத்தை 15வருடங்களில் நிறைவேற்றிவிடலாம் என்றார் சுரேஷ் பிரபு.
சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரபு மத்திய மின்துறை அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பால் தாக்கரே வாஜ்பாய்க்கு உத்தரவிட்டார்.
சுரேஷ் பிரபுவை இழக்க விரும்பாத வாஜ்பாய் அவரிடம் நதிகள் இணைப்புத் திட்டப் பணியைக் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு மக்கள் இயக்கம் தொடங்குவேன், ரூ. 1 கோடி தருவேன் என்று உறுதியளித்த நடிகர் ரஜினிதனது உறுதிமொழிகளை வாபஸ் பெற்றுவிட்டார். காவிரி பிரச்சனை உச்சத்தை அடைந்து இருப்பதால் மீண்டும் தனக்கு ஏதாவது சிக்கல்வருவதைத் தவிர்க்க மலேசியா சென்றுவிட்டார். அவர் சென்னை திரும்ப ஒரு மாதத்துக்கும் மேலாகும்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications