பெண் "தாதா" கைது: கந்து வட்டி கும்பலின் தலைவி
சென்னை:
சென்னையில் லட்சக் கணக்கான ரூபாய் கடன் கொடுத்து, கந்து வட்டி வசூல் வேட்டையாடி வந்த பொம்மி என்றபெண் ரவுடியைப் போலீசார் கைது செய்தனர். வட்டி தராதவர்களை அடியாட்கள் மூலம் கத்தியைக் காட்டி கொலைசெய்து விடுவதாக அவள் மிரட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.
சென்னை-அரும்பாக்கத்தைச் சேர்ந்த பொம்மி கடந்த சில ஆண்டுகளாகவே கந்து வட்டி வசூலில் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்தாள். ஏராளமான மக்கள் அவளிடமிருந்து ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர்.
அவர்களிடமிருந்து மீட்டர் வட்டி, கந்து வட்டி என்று பலவிதமான வட்டிகளைப் போட்டு அவர்களைக் கதறடித்துக்கொண்டிருந்தாள் அவள்.
இந்த அநியாய வட்டியைச் சரியாகக் கட்ட முடியாத அப்பாவி மக்களை, வேறு சில ரவுடிகளின் உதவியுடன்கத்தியைக் காட்டிக் கடத்திச் சென்று கொன்று விடப் போவதாக மிரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன.
இன்னும் சிலரை மிரட்டி, அவர்களுடைய சொத்துக்களையும் பொம்மி எழுதி வாங்கியுள்ளாள்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிலர் பொம்மியைப் பற்றிப் போலீசாரிடம் புகார் அளிக்க ஆரம்பித்தனர்.இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இன்று பொம்மியைக் கைது செய்தனர்.
மக்களிடம் அநியாயமாக வட்டி வசூலித்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவற்றின் கீழ் பொம்மி மீதுவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications