கொலம்பியா: கல்பனாவின் சிதைந்த உடல் அடையாளம் காணப்பட்டது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்க ராக்கெட்டான கொலம்பியா வெடித்துச் சிதறியதில் கொல்லப்பட்ட இந்தியாவின் முதல் விண்வெளிவீராங்கனையான கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களின் சிதைந்து போன பாகங்கள் அடையாளம்காணப்பட்டுள்ளன.

கடந்த 1ம் தேதி விண்வெளி ஆய்வை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிய விண்வெளி வீரர்கள், பூமியில்தரையிறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன் கொலம்பியா திடீரென வெடித்துச் சிதறியதால் பரிதாபமாகஉயிரிழந்தனர்.

உயிரிழந்த விண்வெளி வீரர்களின் சிதைந்த உடல்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உள்ளிட்ட 200 கி.மீ.சுற்றளவில் சிதறிக் கிடந்தன. சுமார் 10 நாட்களாக இவற்றைச் சேகரிக்கும் பணியும், கொலம்பியாவின் சிதைந்தபகுதிகளை மீட்கும் பணியும் நடைபெற்றன.

பின்னர் மரபணு சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மூலம் உயிரிழந்த விண்வெளி வீரர்களின் உடல்கள்அடையாளம் காணப்பட்டன. டோவர் விமானப்படை தளத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் இந்தச் சோதனைகள்நடைபெற்றன.

அதன்படி தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆறு வீரர், வீராங்கனைகளின் உடல்கள் விரைவில் அவர்களின்உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இஸ்ரேல் நாட்டின் முதல் விண்வெளி வீரரான இலான் ராமோனின்உடல் ஒரு சில நாட்களுக்கு முன்பே அவர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதைக்கப்பட்டு விட்டது.

மேலும் இறந்து போன வீரர், வீராங்கனைகளின் இறப்புச் சான்றிதழ்களும் தயாராகி விட்டதாக நாஸா அதிகாரிஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கொலம்பியா எப்படி வெடித்தது என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதன் இடது இறக்கையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் அதிக அளவில் வெப்பம்பரவி அந்த ராக்கெட் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனி விசாரணைக் குழுவினர், கொலம்பியாவின் சிதைந்த பாகங்களைக் கைப்பற்றிதொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சீனாவின் விண்வெளி பயணம்:

இதற்கிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்த சீனா முடிவு செய்துள்ளது.

சீனா தன் நாட்டு விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது இதுதான் முதல் முறையாகும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+