காதலே வா.. வா.. காதலே போ.. போ..

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

காதலர் தினம் இன்று உலகெங்கும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்து மக்கள் கட்சி, சிவசேனை ஆகியவை இந்த தினத்தை எதிர்த்து கடைகளை உடைத்து போராட்டம் நடத்தி வருகின்றன.

உள்ளத்தில் தொடங்கி உள்ளத்தில் முடிவது காதல் என்கிறார் கவியரசு வைரமுத்து. அதைக் கொண்டாடுவதும் தவறில்லையேஎன்கிறார்.

ஆனால், காதல் சரியோ தப்போ, அதை ஒரு தினமாகக் கொண்டாட வேண்டுமா என்பது பலரது கேள்வி. இந்த தினம் நமதுகட்டுப்பெட்டி சமூகத்தை சீர்குலைக்குத்துவிடும் என்பது இந்த தின எதிர்ப்பாளர்களின் கருத்தாக உள்ளது.

கிரீட்டிங்க்ஸ் கார்டு விற்பனை செய்யும் நிறுவனங்கள் தான் தங்கள் வியாபார தந்திரமாக இப்படி ஒரு தினத்தையேஆரம்பித்தார்கள் என்ற கருத்தும் உள்ளது.

யாருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ, காதலர்களுக்கு இந்த தினம் பிடித்துத் தான் இருக்கிறது. இதை கிரீட்டிங்ஸ் மெயில்களின்பயன்பாடும், பரிசுப் பொருள்களின் விற்பனையும் உறுதி செய்கின்றன.

சென்னை நகரின் முக்கிய இடங்களில் காதலர்கள் கூட்டம் காணப்படுகிறது. எலியட்ஸ் கடற்கரை, ஸ்பென்சர்பிளாசா, தியேட்டர்கள், மெரீனா கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் காதலர்கள் கூட்டம்அலை மோதுகிறது.

வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துக்கள், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றைத் தங்கள் காதலர்களுக்கு அளித்துமகிழ்ந்து வருகின்றனர். மேலும் சாட்டிலைட் டி.விக்களிலும் காதலர் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகி வருகின்றன.

காதலர்களுக்காக சில கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடந்தாகக் கூட செய்திகள் வருகின்றன.

ஆனால், காதலர் தினத்துக்கு சிவசேனை வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மும்பையில்பெரும் ரகளையில் அந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டும் கிரீட்டிங்க்ஸ் கடைகளையும், காதலர் தினத்தை முன்னிட்டுஅலங்காரம் செய்த கடைகளையும் சிவ சேனைத் தொண்டர்கள் தாக்கினர்.

முதன்முறையாக தமிழகத்திலும் இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சியைச்சேர்ந்தவர்கள் கோயம்புத்தூரில் இன்று காதலர் தின எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

வாலன்டைன்ஸ் டே கார்டுகளை வாங்கி ரோட்டில் போட்டு எரித்தனர். இக் கட்சியின் பொதுச் செயாலாளர் அர்ஜூன் சம்பத்தலைமயில் நடந்த போராட்டத்தில், காதலர் தினம் என்பது மேற்கத்திய மோகத்தின் எதிரொலி என கோஷமிட்டனர்.

இவர்களாவது காசு போட்டு கார்டுகளை வாங்கி எரித்தனர். மும்பையில் சிவ சேனையினரோ கடைகளில் புகுந்து கார்டுகளை அள்ளிதெருவில் வீசியும், கடைக்காரர்களைத் தாக்கியும், பரிசுப் பொருள்களை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். போரிவிலி அருகேதேசியப் பூங்காவை ஒட்டி ஒரு கடை இன்று சின்னாபின்னாவாக்கப்பட்டது. இது போல பல கடைகள் நேற்றும் உடைக்கப்பட்டன.

இதையடுத்து பரிசுப் பொருள்கள் விற்கும் கடைகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுளளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+