தடை நீக்கம்: புலிகளுக்கு அமெரிக்கா நிபந்தனை
வாஷிங்டன்:
விடுதலைப்புலிகள் அமைதி வழிக்குத் திரும்பினால் அவர்கள் மீதான தடை நிச்சயம் நீக்கப்படும்என்று அமெரிக்கா கூறியுள்ளது.
புலிகள் மீது கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்கா தடை விதித்தது. இந்நிலையில் தற்போதுஅவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்துவருவது அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சரான ரிச்சர்டு ஆர்மிட்டேஜ்கூறுகையில்,
ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்து விட்டாலும் இனிமேல்தான் புலிகள் சற்றுசிரமமான முடிவுகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
போர்நிறுத்த ஒப்பந்தங்களையும், அமைதிக்கான வழிமுறைகளையும் முழு அளவில் மதித்து நடக்கவேண்டிய கட்டாயத்தில் புலிகள் உள்ளனர்.
அவற்றையெல்லாம் தாண்டி, முழு நம்பிக்கையுடன் அமைதி வழிக்குத் திரும்பினால் சர்வதேசபயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்து புலிகள் அமைப்பின் பெயரை நிச்சயம் நீக்குவோம்.
அமெரிக்காவில் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தடைகளும் விலக்கிக் கொள்ளப்படும்என்றார் ஆர்மிட்டேஜ்.
கடந்த வாரம் ஜெர்மனியில் ஐந்தாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன், இலங்கையின் நெடுந்தீவு கடல் பகுதியில் மூன்று கடற்புலிகள் தங்கள்உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களுடைய படகும் வெடித்துச் சிதறியது. அந்தப் படகில் விமான எதிர்ப்பு பீரங்கியைபோர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்தே கடற்புலிகள் தற்கொலைசெய்து கொண்டனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து ஆர்மிட்டேஜ் பேசியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications