For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளத்தில் தமிழக விவசாயிகள், பத்திரிக்கையாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

பவானி ஆற்றின் குறுக்கை கட்டப்படும் அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக விவசாயிகளையும்,பத்திரிக்கையாளர்களையும் கேரள போலீசாரும் ரெடிகளும் மிகக் கடுமையாகத் தாக்கினர்.

ஈரோடு, கோபி, நம்பியூர், அன்னூர் பகுதிகளைச் சேர்ந்த இவர்களை திமுக விவசாய அணிச் செயலாளர்தர்மலிங்கம் அழைத்துச் சென்றார்.

ஆனைக்கட்டி வழியாக முக்காலிக்குச் சென்ற இவர்களுடன் பத்திரிக்கையாளர்களும் சென்றனர். அங்கு மத்தியசுற்றுச்சூழல் துறையின் உத்தரவையும் மீறி நடந்து வரும் அணைக் கட்டின் கட்டுமானப் பணிகளை இவர்கள்பார்வையிட்டபோது போலீசார் ஓடி வந்தனர்.

இங்க எதுக்குடா வந்தூதீங்க என்று கேட்டனர். நாங்கள் பணிகளைத் தடுக்கவோ, பிரச்சனை செய்யவோவரவில்லை, பார்வையிடத் தான் வந்தோம் என்று விவசாயிகள் கூறினர்.

Bhavani issueஆனால், உடனே அங்கிருந்த ரெளடிகளை போலீசாரே தூண்டிவிட்டு தமிழக விவசாயிகளைத் தாக்குமாறு சைகைகாட்டினர். உடனே அக் கும்பல் உருட்டுக்கட்டைகளால் தமிழக விவசாயிகளைத் தாக்கியது. இதைத் தடுத்தபத்திரிக்கையாளர்களை போலீசார் தாக்கினர்.

காமிராக்களில் இருந்து பிலிம்களை உருவினர். தண்ணி இல்லாட்டி சாக வேண்டியது தானடா என்ற ரீதியில் மிகக்கேவலமான வார்த்தைகளால் தமிழக விவசாயிகளை கேரள போலீஸ் மற்றும் ரெளடிகள் அர்சித்தவண்ணம்தாக்கினர்.

பல போட்டோகிராபர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் முகத்தில் குத்து விழுந்தது. இதில் 5 விவசாயிகள்படுகாயமடைந்தனர். 15 பத்திரிக்கையாளர்களும் காயமடைந்தனர்.

இச் சம்பவத்தால் ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. காட்டுமிராண்டி போலீஸ்கும்பலையும் ரெளடிக் கும்பலையும் கேரள அரசு கைது செய்யாவிட்டால் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச்செல்லும் உணவு தானியங்களைத் தடுப்பது உள்பட அனைத்து தீவிர நடவடிக்கைகளிலும் இறங்க விவசாயிகள்முடிவு செய்துள்ளனர்.

கேரளத்தில் மட்டை அரிசி தவிர உணவுப் பொருள்கள் எதுவும் விளைவிக்கப்படுவது இல்லை. கேரளவிவசாயிகள் ஏலக்காய், ரப்பர், பழங்கள் என பணப் பயிர்களைத் தான் விளைவித்து வருகின்றனர்.

கத்திரிக்காயில் இருந்து பருப்பு வரை தமிழகத்தில் இருந்து தான் செல்கிறது. கேரளத்தின் காய்கறித் தேவையைதமிழகம் தான் 90 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறது. இந் நிலையில் கேரளம் அணையைக் கட்டி தமிழகத்துக்கே நீர்விடுவதை நிறுத்த முயற்சிக்கிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X