பெண் நீதிபதியை தாக்கிய வழக்கு: 4 வக்கீல்களுக்கு ஜாமீன்
நாகர்கோவில்:
பெண் நீதிபதியைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வக்கீல்களுக்கும்நாகர்கோவில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் சமீபத்தில் திடீர் தாக்குதல் நடந்தது. இதில்வக்கீல்கள் சேர்ந்து கொண்டு தன்னைத் தாக்கியதாக நீதிபதி விஜயலட்சுமி போலீஸில் புகார்கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் முருகேசன், சுபாஷ்குமார், சுப்பிரமணியம் மற்றும் முகமது மைதீன் ஆகியநான்கு வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைக் கண்டித்து நேற்று சென்னையைத் தவிர தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் உள்ள சுமார்36,000 வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டிருந்த நான்கு வக்கீல்களும் தங்களை ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்று கோரி நாகர்கோவில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.
அம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கருப்பையா நான்கு வக்கீல்களையும் சொந்த ஜாமீனில்விடுவிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் தங்கள்போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். ஆனால் பூதப்பாண்டி நீதிபதி விஜயலட்சுமியைஇடமாற்றம் செய்யும் வரை அங்குள்ள நீதிமன்ற வக்கீல்கள் தொடர்ந்து பணிப்புறக்கணிப்புபோராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications