தொலைபேசி கட்டண உயர்வை எதிர்த்து டெலிபோன் ஊழியர்களே போராட்டம்
சென்னை:
தொலைபேசி கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் தொலைபேசித் துறை ஊழியர்களேபோராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பி.எஸ்.என்.எல். எனப்படும் மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனம் சாதாரணத்தொலைபேசிகளின் கட்டணத்தை வரும் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. ஆயிரக்கணக்கான சந்தாதாரர்கள்தங்களது இணைப்பைத் திருப்பிக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் தொலைபேசித் துறை ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். தங்களது வேலைக்கும் பாதிப்புவரலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தொலைபேசித் துறைஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சார்பில் வள்ளுவர் கோட்டம் எதிரில் இன்றுஆர்ப்பாட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தொலைபேசிக் கட்டணத்தை விரைவில் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அகில இந்தியஅளவில் காலவரையற்ற போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட நேரிடும் என்று அப்போதுஊழியர்கள் எச்சரித்தனர்.
கட்டணம் குறையுமா?- அமைச்சர் விளக்கம்:
இதற்கிடையே தொலைபேசிக் கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகமத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சரானதிருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் நிருபர்களிடம் இது குறித்து அவர் கூறுகையில்,
தொலைபேசிக் கட்டண உயர்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகளை தொலைபேசித் துறைகவனத்தில் கொண்டுள்ளது. இது குறித்துப் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த நிதியாண்டில் தகவல் தொடர்புத் துறைக்கு ரூ.700 முதல் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்படும். நாட்டின் மென்பொருள் உற்பத்தி தேசிய அளவில் 13 சதவீதமாக உள்ளது. இதுஅடுத்த பத்தாண்டுக்குள் 35 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மென்பொருள் உற்பத்தி 2 சதவீதமாக உள்ளது. அடுத்த ஐந்தாண்டுக்குள் இதை 10சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 7 லட்சமாக உள்ளது. இது விரைவில் 15லட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பா.ஜ.கவினர் வாக்களிக்க மாட்டார்கள். அங்குபா.ஜ.க. தேர்தல் புறக்கணிப்பை முழுமையாகக் கடைப்பிடிக்கும். இருப்பினும் தங்களுக்குவிருப்பப்பட்டவர்களுக்கு வாக்களிக்க பா.ஜ.கவினருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்அவர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications