அத்துமீறி நுழைந்த ராணுவ வீரரை சுட்டு கொன்ற புலிகள்
கொழும்பு:
தங்களது கட்டுப்பாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கிரனைட் வெடிகுண்டை வீசித் தாக்குதல் நடந்த முயன்றஇலங்கை ராணுவ வீரரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டு வந்தாலும் அதை அதிபர் சந்திரிகாவும், ராணுவமும்முழுமையாக ஏற்கவில்லை. அவ்வப்போது ராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள்தொடர்ந்தவண்ணமே உள்ளன.
சமீபத்தில் விமான எதிர்ப்பு பீரங்கிகளுடன் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்ட 3 புலிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதே போல யாழ்பாணத்திலேயே ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நுழைந்த பெண்புலிகளிடம் பெல்ட்களை கழற்றச் சொல்லி ராணுவ வீரர்கள் அத்துமீறி நடந்து கொணடனர். இதற்கு நார்வே மற்றும்புலிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந் நிலையில் நேற்றிரவு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்பாணத்தின் கிலாலி பகுதிக்குள் ஒரு ராணுவ வீரர்அத்துமீறி நுழைந்தார். அவரை புலிகள் சுற்றி வளைத்தபோது கையில் இருந்த கிரனைட் குண்டை வீசித் தாக்குதல்நடத்த முயன்றார்.
இதையடுத்து புலிகள் அவரை சுட்டு வீழ்த்தினர். வீரரின் உடலை புலிகள் ரெட்கிராஸ் அமைப்பின் மூலம்ராணுவத்திடம் ஒப்படைக்க புலிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த வீரருடன் வந்த மேலும் 2 ராணுவத்தினர் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிகிறது.
புலிகளின் பகுதிக்குள் நடந்த இச் சம்பவம் குறித்து ராணுவம் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
கடந்த 7 மாதங்களுக்கு முன் இதே கிலாலி பகுதியில் நுழைந்த ஒரு ராணுவ வீரர் தனது ஆட்டோமேடிக்துப்பாக்கியில் கண்மூடித்தனமாக பொது மக்களை நோக்கிச் சுட்டார். இதையடுத்து அவரை புலிகள் சுட்டுக்கொன்றனர்.
இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அருகில் உள்ள ராணுவ முகாமில் இருந்து வரும்இந்த வீரர்கள் தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்திவிட்டு ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications