தமிழக விவசாயிகள், நிருபர்கள் மீது பயங்கர தாக்குதல்: கேரள போலீஸ் மீது தமிழக போலீஸ் வழக்கு

Subscribe to Oneindia Tamil

கோவை:

பவானி ஆற்றின் குறுக்கை கட்டப்படும் அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக விவசாயிகளையும்,பத்திரிக்கையாளர்களையும் கேரள போலீசாரும் ரெடிகளும் மிகக் கடுமையாகத் தாக்கினர்.

இதையடுத்து தாக்குதல் நடத்திய கேரள போலீசார் மீதும், அவர்களுக்கு உதவிய ரெளடிகள் உள்ளிட்ட 60 பேர்மீதும் தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு, கோபி, நம்பியூர், அன்னூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிளையும், கோவை மாவட்ட பத்திரிக்கைநிருபர்களையும் திமுக விவசாய அணிச் செயலாளர் தர்மலிங்கமும், காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியினரும்முக்காலிக்கு அழைத்துச் சென்றார்.

ஆனைக்கட்டி வழியாக முக்காலிக்கு இவர்கள் சென்றனர். அங்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் உத்தரவையும் மீறிநடந்து வரும் அணைக்கட்டின் கட்டுமானப் பணிகளை இவர்கள் பார்வையிட்டபோது போலீசார் ஓடி வந்தனர்.

இங்க எதுக்குடா வந்தீங்க என்று கேட்டனர். நாங்கள் பணிகளைத் தடுக்கவோ, பிரச்சனை செய்யவோ வரவில்லை,பார்வையிடத் தான் வந்தோம் என்று விவசாயிகள் கூறினர்.

ஆனால், உடனே அங்கிருந்த ரெளடிகளை போலீசாரே தூண்டிவிட்டு தமிழக விவசாயிகளைத் தாக்குமாறு சைகைகாட்டினர். உடனே அக் கும்பல் உருட்டுக்கட்டைகளால் தமிழக விவசாயிகளைத் தாக்கியது.

kerala policemen attacking Tamilnadu press personsசுமார் 60 உள்ளூர் மக்கள், ரெளடிகள், ரெளடிகளை விட மோசமாக நடந்து கொண்ட போலீசாரிடம் சிக்கிக்கொண்ட அப்பாவி தமிழக விவசாயிகள் சரமாரியாக அடி விழுந்தது. இதைத் தடுத்த பத்திரிக்கையாளர்களைபோலீசாரே தாக்கினர்.

காமிராக்களில் இருந்து பிலிம்களை உருவினர். தண்ணி இல்லாட்டி சாக வேண்டியது தானடா என்ற ரீதியில் மிகக்கேவலமான வார்த்தைகளால் தமிழக விவசாயிகளை கேரள போலீஸ் மற்றும் ரெளடிகள் அர்சித்தவண்ணம்தாக்கினர். பல போட்டோகிராபர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் முகத்தில் குத்து விழுந்தது.

இந்தக் கொலைவெறித் தாக்குதலில் 5 விவசாயிகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. மேலும் பலரும் காயமடைந்தனர்.15 பத்திரிக்கையாளர்களும் காயமடைந்தனர்.

உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இவர்கள் கோயம்புத்தூர் திரும்பினர். இதையடுத்து தினத் தந்தி நிருபர்தலைமையில் பத்திரிக்கையாளர்கள் கோவை போலீஸ் கமிஷ்னரைச் சந்தித்து தாங்கள் தாக்கப்பட்டது குறித்துவிளக்கினர். உடனே அவர் மாவட்ட கலெக்டர் முருகானந்ததைத் தொடர்பு கொண்டார்.

இதையடுத்து காயமடைந்தவர்களை உடனே மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க கலெக்டர்உத்தரவிட்டார். பின்னர் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறிய முருகானந்தம்இச் சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசினார்.

தாக்குதல் நடத்திய கேரள போலீசார் மீதும் ரெளடிகள் மீதும் உடனே வழக்குப் பதிவு செய்யுமாறு தலைமைச்செயலகத்தில் இருந்து உத்தரவு வந்தது.

இதைத் தொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முக்காலியில் இருந்த கேரள போலீசார் மீதும், மேலும் 60ரெளடிகள், உள்ளூர்வாசிகள் மீதும் கொலை முயற்சி, சிறை பிடித்தல், தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கேரள போலீசார் நீதிமன்றத்துக்கு இழுத்தடிக்கப்படுவார்கள்.

இச் சம்பவத்தால் ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. காட்டுமிராண்டி போலீஸ்கும்பலையும் ரெளடிக் கும்பலையும் கேரள அரசு கைது செய்யாவிட்டால் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச்செல்லும் உணவு தானியங்களைத் தடுப்பது உள்பட அனைத்து தீவிர நடவடிக்கைகளிலும் இறங்க விவசாயிகள்முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகள் மற்றும் பத்திரிக்கையளர்கள் மீது நடந்த இத் தாக்குதலுக்கு அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளன. தேச ஒற்றுமைக்கே இந்தத் தாக்குதல் பெரும் களங்கமாக அமைந்துள்ளதாக கோவையில் நடந்தஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து இன்று பெரும்பாலான நிருபர்களும் துணை ஆசிரியர்களும் கருப்பு பேட்ஜ் மற்றும்கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளத்தில் மட்டை அரிசி தவிர உணவுப் பொருள்கள் எதுவும் விளைவிக்கப்படுவது இல்லை. கேரளவிவசாயிகள் ஏலக்காய், ரப்பர், பழங்கள் என பணப் பயிர்களைத் தான் விளைவித்து வருகின்றனர்.

கத்திரிக்காயில் இருந்து பருப்பு வரை தமிழகத்தில் இருந்து தான் செல்கிறது. கேரளத்தின் காய்கறித் தேவையைதமிழகம் தான் 90 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறது. இந் நிலையில் கேரளம் அணையைக் கட்டி தமிழகத்துக்கே நீர்விடுவதை நிறுத்த முயற்சிக்கிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+