மதுரை உயர் நீதிமன்ற கட்டடப் பணிகள்: திமுக மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபணம்
மதுரை:
மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளையின் கட்டுமானப் பணிகளில் பெரிய ஊழல்ஏதும் நடக்கவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக உள்துறைச் செயலாளர்சையத்முனீர்ஹோதா கூறினார்.
மதுரையில் திமுக ஆட்சியில் உயர் நீதிமன்றக் கட்டடக் கிளை கட்டும் பணி தொடங்கியது. இதில்திமுகவினருக்கே காண்ட்ராக்டர்கள் தரப்பட்டதாகவும், இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும்தமிழக அரசு குற்றம் சாட்டியது.
இதையடுத்து பல திமுகவினரின் வீடுகளில் சோதனைகள் நடந்தன.
இந் நிலையில் கட்டுமானப் பணிகளை உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதா நேரில்பார்வையிட்டார். அவருடன் பொதுப் பணித்துறைச் செயலாளர் குத்தாலிங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் சேதுராமச்சந்திரன் ஆகியோரும் சென்றனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய முனீர்ஹோதா,
இந்தக் கட்டுமானப் பணியில் நடந்த ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணைநடத்தியது. அப்போது கட்டுமானப் பணியில் காண்ட்ராக்ட் விட்டதில்ல் சிறு அளவில்தான்முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும், கட்டடத்தின் தரத்தில் குறை ஏதும் இல்லை. அதேபோல நிதி ஒதுக்கீட்டிலும் பெரியஅளவில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை.
கட்டடப் பணிகளில் மர வேலைகள் தான் பாக்கி உள்ளன. இவற்றைமுடிக்க கால தாமதம் ஆகலாம்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் இங்கேயும் செய்து தர மாநில அரசுவிரும்புகிறது. நீதிமன்ற அறைகளில் ஏ.சி. வசதி செய்து தரப்படும்.
ஏப்ரல் 14ம் தேதிக்குள் நிச்சயம் இந்த உயர் நீதிமன்றம் செயல்படாது. பணிகளை முடிக்க சற்று காலதாதமதம் ஆகலாம். இன்னும் மார்பிள் பதிக்கும் பணியும் கூட முடியவில்லை.
இந்த வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர் தான் நீதிமன்றம் செயல்படும் என்றார் முனீர்ஹோதா.
இந்தக் கட்டடப் பணிகளில் திமுக பெரும் முறைகேடுகள் செய்ததாக அதிமுக தலைமை குற்றம் சாட்டி வரும்நிலையில் பெரிய அளவில் தவறு நடக்கவில்லை என உள்துறைச் செயலாளர் கூறியிருப்பது மிகுந்த முக்கியத்துவம்பெறுகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications