தேவலாயத்துக்குள் புகுந்து ஓட்டு வேட்டை: விரட்டி அடிக்கப்பட்ட அமைச்சர்கள்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தொகுதியில் அடங்கிய நாசரேத் பகுதியில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் கையில்பைபிள்ளுடன் ஓட்டு சேகரிக்கச் சென்ற அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மில்லர் மற்றும் அதிமுகவினரைஅங்கிருந்த மக்கள் கோபத்துடன் வெளியேற்றினர்.
மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததால் கிருஸ்துவ மக்கள் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்.இதனால் இத் தொகுதியில் உள்ள கிருஸ்துவ நாடார் இன மக்களின் ஓட்டுக்களைத் திரட்டுவதில் அதிமுகவுக்குபெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி கிருஸ்துவ மக்களுக்கு அச் சமூகத் தலைவர்கள்கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து நேரடியாக கிருஸ்துவ மக்களைச் சந்தித்து வாக்கு கோரி வருகின்றனர்அதிமுகவினர்.
இதன் ஒரு பகுதியாக நாசரேத்தில் உள்ள பரிசுத்தயோவான் தேவாலயத்துக்குள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம்,மில்லர் ஆகியோர் தலைமையிலான அதிமுகவினர் நேற்று சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சிறப்புப்பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிருஸ்துவ மக்களிடம் ஓட்டு கேட்க அவர்கள் சென்றனர்.
இந்த அதிமுகவினர் கைகளில் பைபிள்களும் இருந்தன.
இவர்களைக் கண்டு எரிச்சலுற்ற மக்கள் ஓட்டு கேட்பதை வெளியில் இருந்து கேளுங்கள். தேவாலயத்துக்குள்எல்லாம் வந்து அரசியல் செய்யாதீர்கள். இது பிரார்த்தனை செய்யும் இடம். இங்கு ஏன் ஓட்டு கேட்க வந்தீர்கள் எனஎரிச்சலுடன் கேட்டனர்.
இதை சற்றும் எதிர்பாராத அதிமுகவினர் பதிலுக்கு பேச முயன்றனர். ஆனால், பிரார்த்தனையைத் தொடரவேண்டும். உடனே வெளியே போங்கள் என்று கூறி அவர்களை மக்கள் விரட்டியடித்தனர்.
இதனால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டது. ஆனால், நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்ட பன்னீர்செல்வம்அதிமுகவினரை அடக்கி வெளியில் அழைத்துச் சென்றார்.
தேர்தல் கமிஷனிடம் காங். புகார்:
இதற்கிடையே அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ்சட்டமன்றக் கட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறினார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்,சாத்தான்குளத்தில் அதிமுகவினர் தொடர்ந்து "இறக்குமதி" செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இவர்கள் மூலம் கள்ள ஓட்டுக்கள் குத்தப்பட உள்ளன.
இலவச சேலை, கிரிக்கெட் பேட், கோவில்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை அதிமுகவினர் தொடர்ந்துசட்ட விரோதமாக வழங்கிக் கொண்டுள்ளனர். இதைத் தடுக்கக் கோரி தலைமை தேர்தல்அதிகாரியிடம் இன்று மீண்டும் ஒரு மனு கொடுத்துள்ளோம்.
173 வாக்குச் சாவடிகளிலும் வீடியோ காமிராக்களைப் பொருத்த வேண்டும் என்றார்.
இளங்கோவன் புகார்:
இதற்கிடையே சாத்தான்குளத்தில் அதிமுகவினரும் குண்டர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவனும் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலைக் கைப்பற்ற அதிமுகவினர் எல்லாவிதமானசட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
இ. கம்யூ. கோரிக்கை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலை நியாயமாக நடத்துவதற்கான நம்பத்தகுந்த நடவடிக்கைகளைதமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.
இக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. இக் கூட்டத்தில்சாத்தான்குளத்தில் தேர்தல் நியாயமாகவும், ஜனநாயக முறைப்படியும் நடக்க மாநில அரசுஒத்துழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வழக்கு தள்ளுபடி:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைசென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளம் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த இந்தியக் குடியரசுக் கட்சி (அம்பேத்கர்)சார்பில் ராஜ்குமார் என்பவரின் மனு, நோட்டரி பப்ளிக் சான்றிதழ் இணைக்கப்படாததால்நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், வழக்கு முடியும் வரை தேர்தலைநிறுத்தி வைக்க உத்தரவிடவும் கோரினார். ஆனால் தேர்தல் பணிகள் நடைமுறைக்கு வந்த பின் அதில்தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்று கூறி ராஜ்குமாரின் மனுவை நீதிபதி சதாசிவம்தள்ளுபடி செய்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications