கடலுக்குள் சென்ற 16 ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம்: இலங்கை கடற்படை மீண்டும் கைவரிசை?

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிப்பதற்காகச் சென்ற 16 மீனவர்கள் 2 நாட்களாகியும்வீடு திரும்பாததைத் தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று அந்நாட்டுசிறைகளில் அடைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பும் கூட கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம்மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தங்கள் எல்லையில் வந்து மீன் பிடித்ததாகப் புகார் கூறிய இலங்கை கடற்படையினர், இரண்டுபடகுகளைத் தங்கள் படகுகளால் மோதிக் கவிழ்த்து விட்டு, 16 மீனவர்களையும் சிறைப் பிடித்துச்சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 602 படகுகள் ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிப்பதற்காகச் சென்றன. இதில் சென்ற அனைத்து மீனவர்களும் தங்கள் படகுகளுடன் நேற்றுகாலையிலேயே கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும்.

ஆனால் 16 மீனவர்கள் நேற்று மாலை வரை ராமேஸ்வரத்திற்குத் திரும்பவில்லை. மேலும் ஒருபடகும் கரைக்குத் திரும்பவில்லை.

இதையடுத்து காணாமல் போன மீனவர்களையும், அந்தப் படகையும் தேடி வேறு சில மீனவர்கள்கடலுக்குள் விரைந்துள்ளனர். இந்த 16 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர்தான் கடத்தி,கைது செய்திருப்பார்களோ என்ற சந்தேகமும் நிலவுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+