திருச்சி சிறையில் தூக்கு போட்டு கைதி தற்கொலை: காரணம் கூற அதிகாரிகள் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

சாராய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் திருச்சி மத்திய சிறையில் மர்மமானமுறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் மதனகுடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஒரு சாராய வியாபாரி ஆவார்.இவர் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்தது தொடர்பாக பல முறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி கள்ளச் சாராயம் விற்றதாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயராமன்.

தினமும் கைதிகள் காலைக் கடன்களை முடிப்பதற்காக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அவர்களைத்திறந்து விடுவது வழக்கம். அதுபோலவே நேற்று காலையும் சிறை ஊழியர்கள் ஒவ்வொருஅறையாகத் திறந்து கைதிகளை வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் ஜெயராமன் தன் அறையில் வேஷ்டியைக் கொண்டு தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இருந்தாலும் அவர் உயிருக்குப் போராடிய நிலையிலேயே தூக்கில்தொங்கிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து ஜெயராமனை திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெயராமன் ஏன் தூக்கில் தொங்கினார் என்பது மர்மமாகவே உள்ளது. அவர் ஏன் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார் என்று கேட்டால் சிறை அதிகாரிகள் சரியான காரணம் கூற மறுத்துவிட்டனர்.

செல்வாக்கு இல்லாமல் வரும் சிறைக் கைதிகளை நிறைய வேலை செய்யச் சொல்லி சிறைஊழியர்கள் துன்பப்படுத்துவார்கள் என்ற புகார்கள் எப்போதும் வருகின்றன. அதுபோலத்தான்அவர்கள் படுத்தும் சித்திரவதை தாங்க முடியாமல் ஜெயராமன் தற்கொலை செய்து கொண்டாரோஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிறை அறைக்குள்ளேயே அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தச்சிறையில உள்ள மற்ற கைதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+