அயோத்தி பிரச்சனை: நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- கலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தி விவகாரத்தில் அரசியல் கட்சிகளும், மதத் தலைவர்களும் நீதிமன்றத்தின் உத்தரவுக்குக்கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பெரும் அரசியல் பரபரப்புகளுக்கிடையே இன்றுகாலை தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் டாக்டர் கலாம் தொடக்க உரையாற்றினார். அவர் தன் உரையில்,

அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை விரைவில் வழங்க வேண்டியதுஅவசியம்தான்.

ஆனாலும் மதத் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக்கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அதைவிட அவசியமானதாகும். அயோத்தியில் சூழ்நிலை மிகவும்மோசமாகி விடாமல் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.

பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவோதான் அயோத்தி பிரச்சனையைத்தீர்க்க முடியும் என்று அரசு மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளது. அதை அனைவருமே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றார் டாக்டர் கலாம்.

நாடாளுமன்றத்தின் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அயோத்தி விவகாரத்தைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இவ்விஷயத்தில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு எதிராகநம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மேலும் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கூடஇவ்விஷயத்தில் அரசின் முடிவை எதிர்த்து போர்க்கொடி எழுப்பலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுநேற்று வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோருடன் பேச்சு நடத்தியுள்ளார்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம் தரும்பா.ஜ.க. அரசின் முயற்சிகளுக்கு நாயுடு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தை வி.எச்.பியிடம் தரலாம் என்கிற ரீதியில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புதெரிவித்துள்ளார் என்பதும் நினைவுகூறத்தக்கது. இந்த விஷயத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்தலையிட்டு வி.எச்.பிக்கு ஆதரவான நிலை எடுத்து வருவதையும் அவர் கண்டித்திருந்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+