பெண் புலிகள் கைதை கண்டித்து இலங்கையில் ஸ்டிரைக்
கொழும்பு:
பெண்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர வற்புறுத்தியதாகக் கூறி 2 பெண் புலிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதைக கண்டித்து திரிகோணமலையில் இன்று ஒருநாள்கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
புலிகள் இயக்கத்தில் சிறார்கள் சேர்க்கப்படுவதாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அடிக்கடிபுலிகளைக் குற்றம் சாட்டி வந்தார். கடந்த 7ம் தேதி தொடங்கி ஜெர்மனியில் இரண்டு நாட்கள்நடைபெற்ற ஐந்தாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையின்போது இப்பிரச்சனை குறித்துமுக்கியமாக விவாதிக்கப்பட்டது.
அப்போது சிறார்களை இனி தங்கள் இயக்கத்தில் சேர்க்க மாட்டோம் என்று புலிகளும் உறுதிஅளித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் 14 வயதுக்குக் குறைவான இரண்டு பெண்களைக் கடத்தி, தங்கள்இயக்கத்தில் சேருமாறு கூறி வற்புறுத்தியதாக இரண்டு பெண் புலிகளை இலங்கைப் போலீசார் கைதுசெய்தனர்.
இந்தக் கைதைக் கண்டித்து திரிகோணமலையில் இன்று முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.அங்கு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. சிங்களர்கள் நடத்தி வரும் பள்ளிகளைத் தவிரஅனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்படவில்லை. சாலைகளில் வாகன நடமாட்டமும் முற்றிலும்ஸ்தம்பித்துப் போனது.
பெண் புலிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை என புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications