குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி புகட்டும் "மொபைல் பள்ளி"

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

திருப்பூர் அருகே ஆதரவற்ற, ஏழைக் குழந்தைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களுக்காக ஒருபஸ்சே வகுப்பறையாக மாறியுள்ளது. பஸ்சில் அமர்ந்து கொண்டே அந்தக் குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூர் அருகே இடுவம்பாளையத்தில் "சுவிட்சர் பிரேம் கார்டன்ஸ்மொபைல் பள்ளி" செயல்பட்டு வருகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள், ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே இந்த"நடமாடும் பள்ளி" நடத்தப்பட்டு வருகிறது. வறுமை காரணமாகப் பாதியிலேயே படிப்பைநிறுத்திவிட்ட குழந்தைகளுக்கும் இந்தப் பள்ளி கல்வி போதித்து வருகிறது.

திருப்பூரில் உள்ள வீரபாண்டி, கே.வி.ஆர். நகர், பாரப்பாளையம், பழக்குடோன்,பெரியபாண்டிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு இந்தப் பள்ளியைச் சேர்ந்த பஸ் செல்கிறது.

அந்தப் பகுதிகளில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்துக் கொண்டு வரும் இந்தபஸ், இடுவம்பாளையத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் வந்து நிறுத்தப்படுகிறது.

பின்னர் அந்த பஸ்சுக்குள்ளேயே வகுப்புகள் தொடங்கி விடுகின்றன. பஸ்சிலேயே கரும்பலகைஉள்ளது. குழந்தைகள் தங்கள் புத்தகங்கள், சிலேட்டுகள், நோட்டுகளை வைத்துக் கொள்வதற்காகலாக்கர்களும் இந்த பஸ்சில் வைக்கப்பட்டுள்ளன.

காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மற்ற பள்ளிகளைப் போலவே இந்த மொபைல்பள்ளியும் செயல்படுகிறது. மற்ற பள்ளிகளில் நடத்தப்படும் பாடமுறைகளே இந்த மொபைல்பள்ளியிலும் பின்பற்றப்படுகிறது. இங்கு வருகைப் பதிவேடு உண்டு.

காலண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. "கற்றலின்இனிமை" இந்த மொபைல் பஸ்சில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

பள்ளி நேரத்தின்போது குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகள், பழங்கள் ஆகியவையும்கொடுக்கப்படுகின்றன. மழை, வெயில் என்று எந்த நேரத்திலும் தடையின்றி குழந்தைகளுக்குப்பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

சில நேரங்களில் மட்டும் மாறுதலுக்காக அருகில் உள்ள காமாட்சியம்மன் கோவிலின் ஆலமரநிழலிலும், கோவில் வளாகத்திலும் வகுப்புகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் பள்ளிமுடிந்ததும் குழந்தைகள் அவரவர் வீடுகளின் அருகே பஸ்சிலேயே சென்றுஇறக்கிவிடப்படுகின்றனர்.

இந்த மொபைல் பள்ளியில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், இங்கு குழந்தைகளைஆசிரியர்களோ ஆசிரியைகளோ அடிப்பதே இல்லை. திட்டுவது கூடக் கிடையாது. எனவேகுழந்தைகளும் அதிக ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் இந்த மொபைல் பள்ளிக் குழந்தைகளின் அந்த பஸ்சின்டிரைவர் பஜராஜன், கண்டக்டர் ஜான் பிரதாப், ஆசிரியை இந்திராகாந்தி மற்றும் ஆயம்மா அம்சத்ஆகியோர் அன்புடன் கவனித்துக் கொள்கின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+