சாத்தான்குளத்தில் குவிந்துள்ள ரெளடிகள்: காங் வழக்கு
சென்னை:
சாத்தான்குளத்தில் அதிமுகவினர் ரெளடிகளைக் குவித்துள்ளதால் அங்கு மத்திய பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நாளை நடக்கிறது.
சாத்தான்குளத்தில் ராமநாதபுரம், மதுரை, நெல்லையில் இருந்து ஏகப்பட்ட தாதாக்கள் குவிக்கப்பட்டு அவர்கள் அதிமுகவினரின்ஆதரவுடன் வீடுகள், கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டாடா சுமோக்களில் சுற்றும் இவர்களைக் கண்டாலே மக்கள்அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தேர்தல் நாளன்று மக்கள் வெளியில் வரக் கூடாது என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலை இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதனால்இவர்கள் ரெளடித்தனத்தையும் ஆரம்பித்துவிட்டனர். நேற்று முன் தினம் காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்குவதாதக் கூறி அப்பாவிகளின்கடைகளையும் உடைத்து எறிந்தனர்.
இதனால் இக் கும்பல்களை முதலில் வெளியேற்றக் கோரி பொது மக்களே உண்ணாவிரதம் இருந்தனர்.
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு செயலாளர் சூரிய பிரகாசம் ஒரு வழக்குத்தொடர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சாத்தான்குளத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தவிர ஏகப்பட்ட ரவுடிகளும் குவிந்துள்ளனர். இதனால் மக்களிடையே பெரும் அச்சஉணர்வு பரவியுள்ளது. போலீசார் இவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். இதனால் மத்தியப் படைகளை வரவழைத்து இந்தரெளடிகளை சாத்தான்குளத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
தேர்தல் கமிஷன் வழங்கிய அடையாள அட்டை வைத்துள்ளவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ரவிராஜ் பாண்டியன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ்வக்கீலை அழைத்த நீதிபதி சுபாஷன் ரெட்டி. இது தொடர்பாக போலீசிலும் தேர்தல் கமிஷனிடத்திலும் புகார் கொடுத்தீர்களா? அதற்கானநகல் உங்களிடம் உள்ளதா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம், புகார் கொடுத்துள்ளோம். ஆனால், நகல் என் கையில் இப்போது இல்லை என்றார்.
இதையடுத்து வழக்கை நாளைக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
லிங்டோவிடம் வாசன் நேரில் புகார்:
இதற்கிடையே சாத்தான்குளத்தில் அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர்லிங்டோவைச் சந்தித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே. வாசன் புகார் கூறினார்.
வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை, குடங்களைத் தருவது, விசாரிக்க வரும் அதிகாரிகளை மிரட்டியும் கெட்ட வார்த்தைகளால்திட்டியும் அனுப்புவது என அதிமுகவினர் செய்து வரும் விதிமீறல்கள் குறித்து ஒரு புகார் மனுவையும் வாசன் தந்தார்.
அவருடன் காங்கிரஸ் எம்.பிக்களான மணிசங்கர் அய்யர், சுதர்ஷன் நாச்சியப்பன், ஞானதேசிகன் மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ்ஆகியோரும் சென்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications