For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த ஆண்டு 108 இந்திய ஹஜ் பயணிகள் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்த ஆண்டு ஹஜ் பயணம் சென்ற இந்தியர்களில் 108 பேர் சவுதி அரேபியாவிலேயே இறந்துள்ளனர். இதில் 9 பேர் விபத்திலும்மற்றவர்கள் இயற்கை மரணமும் அடைந்துள்ளனர்.

மத்திய விமானத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன் நிருபர்களிடம் பேசுகையில்.

4 பேர் ஹஜ் புனித யாத்திரையின்போது சாத்தான் மீது கல் வீசும் சம்பவத்தில் ஏற்பட்ட நெருக்குதலில் சிக்கி உயிரிழந்தனர். 5 பேர் சவுதியில்நடந்த சாலை விபத்துக்களில் மரணமடைந்தனர். மற்ற 99 பேரும் இயற்கையான மரணம் எய்தியுள்ளனர்.

மரணமடைந்தவர்களில் 66 பேர் இந்திய ஹஜ் கமிட்டி மூலம் சவுதி சென்றவர்கள். மற்றவர்கள் தாங்களாகவே தனிப்பட்ட முறையில்சென்றவர்கள்.

ஆண்டுதோறும் ஹஜ் பயணிகள் புனிதப் பயணத்தின்போதே மரணமடைவது வழக்கமாகிவிட்டதால் அவர்களுக்கு இன்சூரன்ஸ்திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து பிரதமர் வாஜ்பாயிடம் பேச உள்ளேன்.

இந்த இன்சூரன்ஸ் திட்டத்துக்கு ஒவ்வொரு பயணியும் ரூ. 150 செலுத்தினால் போதுமானது.

இந்த ஆண்டு ஹஜ் சென்ற இந்தியர்களில் மூத்தவர் சையத் மொய்னுதீன் ஷா. அவருக்கு வயது 100.

ஹஜ் செய்த மிக இளையவர் அலனூர் மக்ஹி. இவர் ஹஜ் பயணத்தின்போது தான் பிறந்தார். கடந்த கடந்த 26ம் தேதி ஹஜ்ஜில் புனிதப்பயணத்தில் இருந்த தாயாருக்கு மக்ஹி பிறந்தார்.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.16 லட்சம் பேர் ஹஜ் பயணித்தனர் என்றார் ஹூசைன்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X