அயோத்தி: 5 நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கும்
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சர்ச்சைக்குரிய மனு மீதானவிசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்த வழக்குவிசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் நடத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட உடன் சர்ச்சைக்குள்ளான 2.7 ஏக்கர் நிலத்தை மத்தியஅரசு கையகப்படுத்தியது. பின்னர் 1994ம் ஆண்டில் அதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை உச்சநீதிமன்றம் கையகப்படுத்தியது. இந்த நிலத்தை மத்திய படைகளின் பாதுகாப்பில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்போது இந்த 67 ஏக்கர் நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் கேட்பதால் அதை வழங்க பா.ஜ.க. அரசுமுடிவு செய்துள்ளது.
இதனால், கையகப்படுத்திய நிலத்தை விடுவிக்குமாறும், அந்த இடத்தில் பூஜைகள் நடத்தவிதிக்கப்பட்ட இடைக் காலத் தடையை நீக்கக் கோரியும் ஒரு மனுவை பா.ஜ.க. அரசு தாக்கல்செய்தது. மேலும் இந்த மனுவை பிப்ரவரி 21ம் (இன்றுக்குள்) தேதிக்குள் விசாரிக்குமாறும்கோரியது.
21ம் தேதிக்குள் நிலத்தைத் தர வேண்டும் என வி.எச்.பி. கெடு விதித்ததால் இந்தக் கோரிக்கையைமத்திய அரசு முன் வைத்தது. ஆனால், யாரது கெடுவுக்கும் பணிய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.இன்று இந்த மனுவை எடுத்துக் கொண்ட 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றம் பெஞ்ச் இந்தவழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
6ம் தேதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும். அன்ரைய தினம் இந்த நிலத்தில் பூஜை நடத்தஅனுமதிக்கலாமா என்பது குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்துவர். இதன் பின்னர் நிலத்தை வி.எச்.பியிடம்வழங்கலாமா என்பது குறித்த விசாரணை நடக்கும்.
கடந்த ஆண்டு இந்த நிலத்தில் பூஜை நடத்தப் போவதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை அறிவித்துகூட்டம் கூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டில் மதக் கலவரம் வெடிக்கும் நிலைஏற்பட்டது. இதையடுத்து இங்கு எந்தவிதமான பூஜையும் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந் நிலையில் தான் நிலத்தையே வி.எச்.பியிடம் தர மத்திய அரசு முயன்று வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என பாபர் மசூதி கமிட்டி கோரிக்கை விடுத்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சாதுக்கள் மாநாடு: வி.எச்.பி. தீவிரம்
இந் நிலையில் சாதுக்கள் மாநாட்டை நடத்துவதில் விஸ்வ ஹிந்து பரிஷத் தீவிரமாக உள்ளது. இந்த மாநாட்டில்ராமர் கோவில் கட்டுவதற்கான நாள் அறிவிக்கப்படும் என வி.எச்.பி. கூறியுள்ளது.
இதற்கிடையே சாதுக்கள் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை டெல்லிஉயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
67 ஏக்கர் நிலத்தை தங்களிடம் தராவிட்டால் தேசிய அளவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என வி.எச்.பி.எச்சரித்துள்ளது. 11 மாதங்களுக்கு முன் இதே போன்ற ஒரு சூழ்நிலை உருவானது. முதலில் நிலம் கேட்ட வி.எச்.பி.பின்னர் இறங்கி வந்து பூஜை நடத்த அனுமதி கேட்டது.
அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் மூலம் வி.எச்.பியை சமாதானம் செய்த பிரதமர் வாஜ்பாய் பூஜையைவேறிடத்தில் நடத்தவும், ஒரு ஊர்வலம் மட்டும் அயோத்தியை நோக்கி நடத்தவும் ஒப்புக் கொள்ள வைத்தார். இம்முறை என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications