பவானி: காவிரி நடுவர் மன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் யோசனை
டெல்லி:
பவானியின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரம் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம்அளித்த உத்தரவின் நகலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் முக்காலி என்ற இடத்தில் பவானியின் குறுக்கே அம்மாநில அரசு அணை ஒன்றைஎழுப்பி வருகிறது.
இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களும்,விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி தமிழக விவசாயிகள் பல்வேறுபோராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே முக்காலியில் கேரள அரசு அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்என்று கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி உமாபால்மற்றும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம்அளித்த உத்தரவின் நகலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
பின்னர் இவ்வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவைநீதிபதி உமாபாலும், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவும் தள்ளுபடி செய்தனர். போதுமான ஆவணங்கள்சமர்ப்பிக்கப்படாததால் இதைத் தள்ளுபடி செய்வதாகக் கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக காவிரிநடுவர் மன்றத்தை நாடலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பவானி அணை விவகாரம் தொடர்பாக விரைவில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துமுறையிடுவோம் என்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவரான கே.பி. ராமலிங்கம்கூறியுள்ளார்.
ஆண்டனிக்கு ராமதாஸ் கடும் கண்டனம்:
இதற்கிடையே நதி நீர்ப் பங்கீட்டு விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்ள முடியாது என கேரளமுதல்வர் ஆண்டனி கூறியுள்ளதற்கு பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுடனான நதி நீர்ப்பங்கீட்டுவிஷயங்களில் தாராளமாக நடந்து கொள்ள முடியாது என்று ஆண்டனி கூறியுள்ளார். இது பெரும்அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
தேசியம் பேசும் காங்கிரஸ் கட்சியின் முதல்வரே இப்படிப் பேசியிருப்பது மிகவும் வன்மையாகக்கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே இதே கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வரான கிருஷ்ணா, உச்ச நீதிமன்றத்தையும்மதிக்கமாட்டேன், காவிரி ஆணையத்தையும் மதிக்க மாட்டேன், தமிழகத்தின் கோரிக்கையையும்கண்டுகொள்ள மாட்டேன் என்று தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருகிறார்.
இப்போது நமது இன்னொரு அண்டை மாநிலமான கேரளா தனது முரட்டுத் தனத்தைக் காட்டத்தொடங்கியுள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நதிகளை தேசியமயமாக்குவது மட்டுமே.அப்போதுதான் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்கும் என்று அவ்வறிக்கையில் ராமதாஸ்கூறியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications