காவிரியில் மேலும் நீரைத் தேக்க கர்நாடகம் புதிய டெக்னிக்
பெங்களூர்:
காவிரியின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் அணைகட்டுத் திட்டங்களுக்காகவும், பாசன- குடிநீர் திட்டங்களைநிறைவேற்றவும் பங்கு விற்பனை மூலம் பொது மக்களிடம் இருந்து ரூ. 5,000 கோடியைத் திரட்ட கர்நாடக அரசுதிட்டமிட்டுள்ளது.
கிருஷ்ணா அணைத் திட்டங்களுக்காக முன்பு கர்நாடகம் இதே போல பல்லாயிரம் கோடியை வசூலித்தது. அதேபோல இப்போது காவிரித் திட்டங்களுக்காக பணம் திரட்ட முடிவு செய்துள்ளது.
இதற்காக காவிரி நீர் பயன்பாட்டு நிதிக் கழகம் என்ற அமைப்பை கர்நாடகம் உருவாக்கவுள்ளது. இத் தகவலைபாசனத்துறை அமைச்சர் பாட்டீல் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
பங்குப் பத்திரங்கள் மூலம் இந்த நிதி திரப்பட்டும். இந்த நிதிக் கழகத்தை உருவாக்க மத்திய பங்கு வர்த்தகவாரியத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும். புதிய திட்டம்எதையும் தொடங்க மாட்டோம்.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி 12 லட்சம் ஏக்கர் வரை பாசனம் செய்யத் தேவையான நீரைநாங்கள் தேக்கலாம். ஆனால், இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அணைக்கட்டுப் பணிகளை முடித்தாலும் கூடஇந்த அளவுக்கான நீரை முழுமையாகத் தேக்கும் கொள்ளவு எங்களிடம் இருக்காது.
இப்போதைய திட்டங்களை முடிக்க குறைந்தபட்சம் அரசுக்கு ரூ. 3,870 கோடி தேவை. ஹேமாவதி அணையைவிரிவாக்க ரூ. 3000 கோடியும், கபினி அணையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூ. 870 கோடியும்தேவைப்படும்.
கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்களை விரிவாக்கவும் பணம்தேவைப்படுகிறது என்றார் பாட்டீல்.
காவிரியின் குறுக்கே 18 புதிய திட்டங்களை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இதில் 5 திட்டங்கள்அணைக்கட்டுத் திட்டங்களாகும். இந்தப் பணிகள் முடிவடைந்தால் மேலும் அதிக நீரை கர்நாடகம் சேமிக்க முடியும்.
நீரைத் திருப்பிவிட்டு அணைகளில் நீர் மட்டத்தை குறைத்தும் காட்ட முடியும். மொத்தத்தில் தமிழகத்துக்குக்கிடைக்கும் நீர் மேலும் குறையும்.
வசூலிக்கப்படும் பணத்தை வைத்து புதிய திட்டங்களைத் தொடங்க மாட்டோம் என அமைச்சர் கூறினாலும்கர்நாடகத்தின் முந்தைய பேச்சுக்கள், நம்ப வைத்து ஏமாற்றும் தந்திரங்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்குத் தான்இவரது உண்மையான முகம் தெரியும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications