படித்தும் பட்டம் கிடைக்காத பல் டாக்டர்கள் உண்ணாவிரதம்
சென்னை:
தங்கள் கல்லூரிக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாததைக் கண்டித்து தாய் மூகாம்பிகை பல்மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.
சென்னையை அடுத்த முகப்பேறு பகுதியில் உள்ளது தாய் மூகாம்பிகை பல் மருத்தவக் கல்லூரி.
இந்தக் கல்லூரி துவங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அதற்கு உரிய அங்கீகாரம்கிடைக்கவில்லை என்று கூறி கடந்த 10 நாட்களாக அதன் மாணவ, மாணவிகள் பல்வேறுபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உரிய அங்கீகாரம் கிடைக்காததால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே படிப்பை முடித்த 98 மாணவ,மாணவிகள் இன்னும் டிகிரி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை-சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகையின் முன்பாக இக்கல்லூரியைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திடம் எத்தனையோ முறை புகார் அளித்தபின்னரும் கூட உரிய நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்று ஒரு மாணவிசோகத்துடன் கூறினார்.
இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் உரிய பலன் கிடைக்கா விட்டால், அடுத்துஎம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமர்ந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்நடத்தப் போவதாக மாணவ, மாணவிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே படித்து முடித்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் பட்டம் கிடைக்காத 98மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக டாக்டர் பட்ட சான்றிதழ்களை வழங்க எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடக் கோரி தாய் மூகாம்பிகை கல்லூரி சார்பிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications