இந்தியரின் சூட்கேசில் பாகிஸ்தான் வாலிபர்!!
பெய்ஜிங்:
பாகிஸ்தானைச் சேர்ந்த வாலிபரை பெரிய சூட்கேஸில் வைத்து ஹாங்காங்கிற்குள் கொண்டு வந்த இந்தியருக்குசிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 6ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த பிரதீப் சிங் சீனா வழியாக ஹாங்காங் வந்தார். மிகப் பெரியசூட்கேஸையும் அவர் எடுத்து வந்தார். சுற்றுலா வந்ததாகக் கூறிக் கொண்டு மிகப் பெரிய பெட்டியைக் கொண்டுவந்ததால் அவர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரைத் தனியே அழைத்துச் சென்றனர். அப்போது பெட்டி தன்னுடையது அல்ல என சிங் கூறினார்.இதையடுத்து பெட்டி திறக்கப்பட்டது. அப்போது அதில் ஒரு வாலிபர் சுருண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம்விசாரணை நடத்தியபோது அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் ராஜா கம்ரான் (24 வயது)என்றும் தெரியவந்தது.
ஹாங்காஙங்கில் நுழைய எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் கம்ரானை சட்டவிரோதமாக உள்ளே கொண்டுவந்துள்ளார் சிங்.
இதையடுத்து அவர் மீது ஹாங்காங் அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இப்போது அவருக்கு 16 மாதசிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு டூட்டி பிரி ஷாப்பில் தன்னைச் சந்தித்த ஒரு இந்திய நண்பர் தான் தன்னிடம் இந்தப் பெட்டியைத்தந்ததாகவும் அதில் செல்போன்கள் இருப்பதாக நம்பி அதை வாங்கி வந்ததாகவும், அதில் ஒரு ஆள் இருந்ததுதெரியாது என்றும் சிங் நீதிபதியிடம் கூறினார்.
சிங்கின் இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications