""மக்கள் போலீசாரானால் பொடிப் பொடி ஆவீர்கள்"": ஜெ.க்கு கருணாநிதி சாபம்
சென்னை:
மின்சாரத் திருட்டு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி பகுதி திமுக செயலாளர் சுரேஷ் குமார்கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பினால் அவருக்குத் தனது தலைமையிலேயேபிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:
சிந்தாதிரிப்பேட்டையில் திராவிடர் இயக்கம் தோன்றியதன் 90வது ஆண்டு விழாவை நாம் பொதுக்கூட்டம் போட்டுக் கொண்டாடினோம்.
அந்தக் கூட்டம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றதைப் பொறுக்க முடியாமல், அதிக அளவில்மக்கள் வெள்ளமென திரண்டு வந்ததைக் காணச் சகிக்க முடியாமல் ஆட்சியாளர்கள் மின்சாரத்தைதிருட்டுத் தனமாக நாம் எடுத்துப் பயன்படுத்தியதாகக் கூறி சுரேஷ்குமார் மீது பொய் வழக்கு ஒன்றைஜோடித்துள்ளனர்.
வழக்குப் போட்டு விட்டதற்காக திமுகவினர் யாரும் இப்போது பயப்படுவதில்லை. தம்பி பரிதிஇளம்வழுதி மீதும் வழக்கு போடப்பட்டது. அவரும் சிறை சென்று வந்தார். அவரைப்பாராட்டினோம்.
அதுபோலவே சுரேஷ் குமாரும் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தால் அவரையும்பாராட்டுவோம். என் தலைமையிலேயே அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு விழாநடத்துவோம்.
யாராவது சிறைக்குச் சென்று திரும்புகிறார்களா? அவர்களை வருக, வருக என்று பாராட்டிவரவேற்கும் பக்குவத்தில்தான் திமுகவினர் இப்போது இருக்கிறார்கள்.
ஓமந்தூரார் முதல் எம்.ஜி.ஆர். வரை நானும் எத்தனையோ முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஜெயலலிதா அளவுக்கு யாரும் வாய்க் கொழுப்போடு பேசியதே இல்லை.
என்னை ஒரு மண்டு என்றும் மக்கு மாணவன் என்றும் ஜெயலலிதா பேசியுள்ளார். நான் யோசித்துப்பார்த்தேன். சில நாட்களுக்கு முன் ஒரு கடிதத்தில் "அன்புள்ள சகோதரி ஜெயலலிதாவுக்கு" என்றுஎழுதியிருந்தேன். "என்னைப் போய் சகோதரி என்று சொல்கிறானே, சரியான மண்டு" என்று அவர்சொன்னதாகவே நான் கருதிக் கொண்டேன்.
பெண், பெண் போலீஸ் என்று ஜெயலலிதா பெருமையாகக் கூறிக் கொண்டுள்ளார். ஆனால்தமிழகத்தில் முதல் முறையாகப் பெண் காவலர்களை அறிமுகம் செய்தது திமுக ஆட்சிதான் என்பதையாரும் மறந்துவிடக் கூடாது.
அதேபோல, போலீஸாருக்கு பல்வேறு சலுகைகளைக் கொடுத்தது, நல வாரியங்கள் அமைத்ததுஅனைத்தும் திமுக ஆட்சியில்தான். அதிலும் நான் முதல்வராக இருந்தபோதுதான்.
போலீஸ், போலீஸ் என்று பேசி அந்தத் துறையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு போலீஸ்ராஜ்ஜியம் நடத்தலாம் என்று நினைக்கின்றனர். அப்படி நடத்த முடியாது. பொதுமக்கள் அனைவரும்ஒருநாள் போலீசாராக மாறினால் உங்கள் போலீஸ் ராஜ்ஜியம் பொடிப் பொடியாக மாறி விடும்என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார் கருணாநிதி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications