கோவை மருந்து கடை அதிபர் கொலை: பா.ஜ.க. பிரமுகருக்கு ஆயுள் தண்டனை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மருந்துக்கடை அதிபர் கொலைவழக்கில் பா.ஜ.க. பிரமுகர் உள்ளிட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோயம்புத்தூர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோயம்புத்தூர் இடையர் தெருவைச் சேர்ந்த சுல்தான் மீரான் அந்நகரில் உள்ள ஆர்.எஸ். புரத்தில்மருந்துக் கடை நடத்தி வந்தார்.
இவர் பத்மாவதி மற்றும் பர்மபிரியா ஆகிய இரண்டு பெண்களைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, பின்னர் அவர்களை முஸ்லீம் மதத்திற்கு மாற்றி விட்டார்.
இது தொடர்பாக சுல்தான் மீரானுக்கும், பா.ஜ.க. பிரமுகரான பூரி கமல் என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆர்.எஸ். புரத்தில் உள்ள பில்லியர்ட்டிஸ் கிளப்பிற்குச் சென்று விட்டுசுல்தான் மீரான் தன் காருக்குத் திரும்பியபோது பூரி கமலும், விஜயன் என்பவரும் அவரைக்கத்தியால் சராமாரியாகக் குத்தினர்.
இந்தச் சம்பவத்தில் சுல்தான் மீரான் தன் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைநடத்திய போலீசார், பூரி கமலையும் விஜயனையும் தேடி வந்தனர். இதையடுத்து பூரி கமல் ஈரோடுநீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து விஜயனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இருவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.இந்தக் கொலை வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 20ம் தேதி கோயம்புத்தூர் முதன்மைநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. மொத்தம் 19 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்புவழங்கப்படுவதற்கு முன், தனக்கு குறைந்த பட்சத் தண்டனை வழங்க வேண்டும் என்று பூரி கமலும்,தனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமே இல்லை என்பதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்றுவிஜயனும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நீதிபதி தணிகாசலம் தன் தீர்ப்பை வழங்கினார். கொலையாளிகளான பூரி கமலுக்கும்,விஜயனுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி தணிகாசலம், அவர்களுக்கு தலாரூ.10,000 அபராதமும் விதித்தார்.
தீர்ப்பையொட்டி நேற்று கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications