கடலூர் அரசு மருத்துவமனையில் நெடுமாறனுக்கு மருத்துவ பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் உடல் நல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெடுமாறன் பல்வேறு வழக்குகள் தொடர்பாக, பலஊர்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் கடலூர் அரசு மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி அவர் சிகிச்சைஎடுத்துக் கொண்டார். பின்னர் மீண்டும் கடலூர் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ள நெடுமாறனுக்கு சர்க்கரை வியாதி,உயர் ரத்த அழுத்தம், கழுத்தில் எலும்பு தேய்வு ஆகிய நோய்கள் உள்ளன.

இந்நிலையில் நேற்று மீண்டும் நெடுமாறனுக்கு முழு அளவிலான பரிசோதனைகள் நடந்தன. ரத்தம்,சிறுநீர், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து அவர் உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தான் நன்றாகஇருப்பதாக நெடுமாறனும் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+