ஊட்டியில் ஒரே நாளில் 42,182 மரக் கன்றுகள் நடவு: கின்னஸ் சாதனை
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 42,182 மரக்கன்றுகள் நடப்பட்டது கின்னஸ் சாதனையாகஅங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டராக சுப்ரியா சாஹு இருந்தபோது வன வளர்ப்பை மக்கள் மத்தியில்பிரபலப்படுத்தும் பொருட்டு ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மரக் கன்றுகளை நடும் நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்தார்.
அதன் படி கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி ஒரே நாளில் 42,182 மரக் கன்றுகள் நடப்பட்டன. ஊட்டிஅருகே கடனாடி என்ற இடத்தில் இதற்கென ஒதுக்கப்பட்டிருந்த 100 ஏக்கர் நிலத்தில் அனைத்து மரக்கன்றுகளும் நடப்பட்டன.
கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசுத் துறை ஊழியர்கள் என சகலதரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி தற்போது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்இது தொடர்பாக கனடா நாடு படைத்திருந்த கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதற்கான விழாவில் சுப்ரியா சாஹு (தற்போது தமிழக சமூக நலத் துறை இயக்குநராக உள்ளார்),நீலகிரி மாவட்டத்தின் தற்போதைய கலெக்டர் செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பாராட்டுச் சான்றிதழை சுப்ரியா சாஹு வழங்கினார்.
-->












Click it and Unblock the Notifications