தேதியை சொன்னால் கிழமையை சரியாகக் கூறும் 8 வயது மதுரை சிறுவன்
மதுரை:
11 ஆண்டுகளில் எந்தத் தேதியைக் கூறினாலும் அதற்கான சரியான கிழமையைக் கூறி வியக்கவைக்கிறான் மதுரையைச் சேர்ந்த 8 வயது மாணவன் ஒருவன்.
கடந்த 21ம் தேதி என்ன கிழமை என்று கேட்டால் கூட நம்முடைய பார்வை சுவரில்மாட்டப்பட்டுள்ள காலண்டரை நோக்கித்தான் செல்லும்.
ஆனால் மதுரையைச் சேர்ந்த ராம்நாத் என்ற சிறுவன் 11 ஆண்டுகளில் எந்தத் தேதியைக்கூறினாலும் அதற்கான கிழமையை "சட்டென்று" கூறுகிறான்.
கடந்த 1995 ஜனவரி 1 முதல் 2005 டிசம்பர் 31 வரை எந்தத் தேதியை அவனிடம் கூறினாலும்,அடுத்த நொடியிலேயே கிழமையைச் சரியாகக் கூறுகிறான் ராம்நாத்.
"இது எப்படிப்பா?" என்று அவனிடம் கேட்டபோது அவன் பதிலளிக்கையில்,
நான் வீட்டில் சும்மா இருக்கும் போதெல்லாம் டைரி, காலண்டர்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டுதான் இருப்பேன்.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி பழைய டைரிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்1995ம் ஆண்டு முதலான கிழமைகளை மனப்பாடம் செய்யத் தொடங்கினேன். ஒவ்வொரு மாதமும்முதல் தேதி என்ன கிழமை வருகிறது என்பதை மனத்தில் பதிய வைத்துக் கொண்டேன்.
இப்படியே தொடர்ந்து மனப்பாடம் செய்ததில் 2005 டிசம்பர் வரையுள்ள தேதிகளுக்கானகிழமைகள் எனக்கு அத்துப்படி ஆகிவிட்டது என்றான் ராம்நாத்.
மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டால்பின் மெட்ரிகுலேசன் பள்ளியில் 3வது வகுப்பு படித்து வரும்ராம்நாத்தின் தந்தை ராமச்சந்திரன் அங்குள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமைஅலுவலகத்தின் கணக்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார். தாய் மீனாட்சி மதுரை போலீஸ்கைரேகைப் பிரிவு நிபுணராக உள்ளார்.
மதுரை-கூடல்நகரைச் சேர்ந்த ராம்நாத்திற்கு ராதா என்ற 14 வயது அக்காவும் இருக்கிறாள்.
ராம்நாத்தின் அபூர்வமான நினைவாற்றலைக் கண்டு அவனுடைய ஆசிரியர்களும், உறவினர்களும்வியந்து வருகின்றனர். "சரி, உன்னுடைய லட்சியம் என்ன?" என்று கேட்டால், "டாக்டராவதுதான்"என்று அவனிடமிருந்து உடனடியாகப் பதில் வருகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications