சாத்தான்குளத்தில் நாளை ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதையொட்டி, தேர்தல்களம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகப் படிப்படியாக சூடு பிடித்து வந்த சாத்தான்குளம் தேர்தல் பிரச்சாரம்தற்போது முற்றிலும் தீவிரமடைந்துள்ளது.

அதிமுகவும் காங்கிரசும் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளதால் இரு கட்சித் தலைவர்களும்,தொண்டர்களும் மக்களிடம் ஓட்டு வேட்டையாடி அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நாளை மாலை 5 மணியுடன் சாத்தான்குளம்தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. அதிலிருந்து அதற்கு அடுத்த 48 மணி நேரம் வரைதேர்தல் சம்பந்தப்பட்ட பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவை நடத்தப்படக் கூடாது என்றும்சினிமா, டி.வி. விளம்பரம் ஆகியவற்றின் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்றும்தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி வெளியிட்டுள்ளஅறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சாத்தான்குளம் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மின்வாக்குப்பதிவு எந்திரங்களும் சோதனை செய்யப்பட்டு தயாராகவே உள்ளன.

பெண்களே அதிகம்:

இந்தத் தொகுதியில் மொத்தம் 1,55,093 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 72,932 ஆண்களும்,82,161 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக தொகுதி முழுவதும் 173வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் தலைமை அதிகாரிகளாக மத்திய அரசுஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த சுமார் 800 ஊழியர்கள் தேர்தல் பணிகளில்ஈடுபடுத்தப்படுவார்கள்.

மொத்தம் 25 வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இரண்டுவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். முதல் எந்திரத்தில் 16 வேட்பாளர்களின்பெயர்களும், மற்றதில் ஒன்பது பெயர்களும் இடம் பெற்றிருக்கும்.

அடையாள ஆவணங்கள்:

வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்கு முன் தங்கள் அடையாள அட்டைகளைக் காண்பிக்க வேண்டும்.அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 17 ஆவணங்களில் ஏதாவதுஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

ஆனால் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் வீடு ஒதுக்கீடுஆகியவற்றைக் காண்பித்து ஓட்டுப் போட அனுமதி இல்லை. மேலும் கடந்த டிசம்பர் 31ம் தேதிக்குப்பின்னர் தொடங்கப்பட்ட வங்கி மற்றும் தபால் சேமிப்பு கணக்கு ஆவணங்களையும் காட்டி ஓட்டுப்போட முடியாது.

26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும்.மாலை 5 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கஅனுமதிக்கப்படுவார்கள். அதன் பின் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது.

2 இடங்களில் அழியாத மை:

ஓட்டுப் போடுவதற்கு வரும் வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலின் இரண்டு இடங்களில்அழியாத மை வைக்கப்படும். அந்த மை காய்ந்த பின்னரே அவர்கள் ஓட்டுப் போடும்மறைவிடத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

வாக்குச் சாவடி இருக்கும் இடத்திற்கு 100 மீட்டர் சுற்றளவு பகுதிகளில் தேர்தல் அலுவலகங்களோ,தேர்தல் தொடர்பான விளம்பரங்களோ, தேர்தல் ஏஜென்டுகளின் கார்களோ அனுமதிக்கப்படாது.இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

கட்சிகள் சார்பாக வாக்காளர்களுக்குத் தரப்படும் அடையாளக் கூப்பன்கள் வெள்ளை நிறத்தில்மட்டுமே இருக்க வேண்டும். வேறு நிறத்தில் இருந்தாலோ, அவற்றில் கட்சிச் சின்னம் ஏதும்அச்சிடப்பட்டிருந்தாலோ அவை வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.

இன்னாருக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் மீதும், பயமுறுத்துபவர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ள ஓட்டுப் போட முயல்பவர்கள் உடனடியாகப்போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

சாத்தான்குளம் இடைத் தேர்தல் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக தலைமைத் தேர்தல்கமிஷன் ஐந்து பார்வையாளர்களை நியமித்துள்ளது. எந்த வாக்குச் சாவடியிலாவது அசம்பாவிதம்நடந்தால், அதைப் பார்வையிடச் செல்லும் பார்வையாளருடன் ஒரு வீடியோ குழுவும் சென்றுசம்பவங்களைப் படம் பிடிக்கும்.

மதுக் கடைகள் மூடல்:

வரும் 24ம் தேதி (நாளை) மாலை 5 மணியிலிருந்து 26ம் தேதி மாலை 5 மணி வரையிலும்தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மதுக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அதே போல் வாக்குஎண்ணிக்கை நடைபெறும் மார்ச் 1ம் தேதியும் அவற்றை மூடியிருக்க வேண்டும். மீறித் திறந்துவைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் நடைபெறும் 26ம் தேதியன்று சாத்தான்குளத்தில் உள்ளூர் பொது விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை தேர்தல் முடிந்த பின்னர் மின் வாக்குப்பதிவு எந்திரங்கள்அனைத்தும் சீலிடப்பட்டு, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் பத்திரமாக வைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை துவங்கும் வரை பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய போலீசார் அங்குபாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள்.

மார்ச் 1ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கைநடைபெறும் இடத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்று சாரங்கி அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+