பிரச்சாரத்தை முடித்தார் ஜெ.: காங்கிரசுக்கு மறைமுக ஓட்டு வேட்டையாடிய ஸ்டாலின்
சாத்தான்குளம்:
கடந்த 17ம் தேதியிலிருந்து சாத்தான்குளத்தில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் நடத்திய முதல்வர்ஜெயலலிதா நேற்று இரவு தன்னுடைய பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.
20ம் தேதி மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்டு 22ம் தேதி வரை சாத்தான்குளத்தில் பிரச்சாரம் செய்யப்போவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் 23ம் தேதி வரை அவர் பிரச்சாரம்செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு இடைத் தேர்தலுக்காக மாநில முதல்வர்ஒருவர் ஐந்து நாட்களுக்கும் மேலாகத் தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.
அதிமுகவுக்கும் பல இடங்களில் மக்கள் அவ்வளவாக ஆதரவு தராத காரணத்தால் ஜெயலலிதாமேலும் ஒரு நாள் பிரச்சாரம் செய்வார் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
தோல்வி பயத்தால்தான் ஜெயலலிதா தன்னுடைய பிரச்சாரத்தை மேலும் ஒரு நாள் நீடித்துள்ளதாககாங்கிரஸ் கட்சி கிண்டலடித்தது.
இந்நிலையில் ஜெயலலிதா ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நேற்று இரவே தன்னுடைய பிரச்சாரத்தைமுடித்துக் கொண்டார். கால்வாய் பகுதியில் ஓட்டு வேட்டையாடிய ஜெயலலிதா, அதைச் சுற்றியுள்ளகிராமங்களிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்று இரவு வரை பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, பின்னர் ஆறுமுகநேரியில் உள்ள தாரங்கதாராவிருந்தினர் மாளிகையில் சென்று தங்கினார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அவர்தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் செல்கிறார்.
இதற்கிடையே சாத்தான்குளத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரான ஸ்டாலின் அதிமுகவுக்குஎதிராக ஓட்டு வேட்டையாடினார்.
காங்கிரசுக்க ஆதரவாக மறைமுகமாகப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், சாத்தான்குளத்தில் திமுகஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசினார்.
திமுகவுக்கும் திமுக எம்.எல்.ஏக்களுக்கும் எதிராக அதிமுக அரசு எடுத்து வரும் பழி வாங்கும்நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசினார் ஸ்டாலின்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி உள்ளிட்ட அக்கட்சியைச்சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தால் காங்கிரஸ்மேலும் அதிகமாக சுறுசுறுப்படைந்துள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications