புலிகளிடம் அடிபணியவில்லை: சந்திரிகாவுக்கு ரணில் சூடு
கொழும்பு:
விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே அவர்களிடம் இலங்கை அரசுஅடிபணிந்து போய் விட்டதாக நினைப்பது தவறு என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேகூறியுள்ளார்.
ரணில் தலையிலான இலங்கை அரசு புலிகளிடம் அடிபணிந்து விட்டதாக அந்நாட்டு அதிபர்சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளும் அமைதிப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ரணில்கூறுகையில்,
புலிகளிடம் நாங்கள் மண்டியிட்டு சரணடைந்து விட்டதாக சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதுதவறு. நாங்கள் புலிகளிடம் மண்டியிடவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே நாங்கள் புலிகளிடம் அடிபணிந்து போய் விட்டதாகநினைப்பது சரியா?
இப்போதைக்கு புலிகளுடன் பேச்சு நடத்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. பேச்சுநடத்துவது தவறு என்றால் மீண்டும் போருக்குத் திரும்ப வேண்டும் என்று கூறுகிறார்களா?
பேச்சுவார்த்தைக்கு தனியாகச் செல்லும் நிலையிலும் நாங்கள் இல்லை. பல உலக நாடுகள் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும் கூட தற்போது நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தையை வரவேற்கின்றன. அவர்கள் என்ன போருக்கா ஆதரவு அளிக்கிறார்கள்?அமைதிக்குதானே? அதில் என்ன தவறு?
இலங்கையில் முழு அமைதி திரும்புவதற்கு பேச்சுவார்த்தை ஒன்றுதான் உறுதியான, இறுதியானவாய்ப்பு என்று நாங்கள் கருதுகிறோம். அப்படிப்பட்ட அமைதிப் பேச்சு தவிர வேறு ஏதாவதுஉருப்படியான வழி இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை எதிர்ப்பவர்கள் தெளிவாகக் கூறலாம்,கூற வேண்டும்.
கடந்த ஆண்டு நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாவதற்கு முன் பல வழிகளிலும் பிரச்சனைகள்இருக்கத்தான் செய்தன. நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கு புலிகள் சம்மதிப்பார்களா என்ற கேள்வி கூடஎழுந்தது.
ஆனால் உலகின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தங்கள்நாட்டிற்குத் திரும்பி வந்து வாழ்வதற்காக பல உலக நாடுகளும் நிதி உதவி செய்ய முன் வந்ததைத்தொடர்ந்து, புலிகளே நிரந்தரப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்தனர். இதுவே அவர்களுடையபெருந்தன்மையையும் கண்ணியத்தையும் காட்டுகிறது அல்லவா என்றார் ரணில்.
இதற்கிடையே நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டுநிறைவடைவதையொட்டி நேற்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அதை மக்கள் கொண்டாடிமகிழ்ந்தனர்.
ஆனால் இன்னும் முழு அமைதி தொடரவில்லை என்றும் ராணுவத்தினரின் கட்டுப்பாடுகள்தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறி இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள புலிகள்மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications