பெண் பயணியை அவமதித்த பஸ் கண்டக்டர்: நஷ்ட ஈடு தர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
பெண் பயணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழககண்டக்டர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்புஅமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முகம்மதுசஹாபுதீன். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி.
கடந்த 1997ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு குடும்பத்துடன்வருவதற்காக 4 சீட்டுகளை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்சில் முன் பதிவு செய்திருந்தார்முகம்மது.
பயண நாளின்போது பேருந்துக்கு வந்த அவரிடம் பஸ்சின் கண்டக்டர் டிக்கெட்டுகளை வாங்கிப்பரிசோதித்துள்ளார். அப்போது முகம்மதுவின் மனைவியைப் பார்த்த அவர், "25 வயது ஆகும்போல இருக்கிறது. ஆனால் டிக்கெட்டில் 20 என்று கூறி இருக்கிறீர்களே" என்று கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து முகம்மதுவுக்கும் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது கண்டக்டர் அநாகரீகமாகப் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து பஸ்சில் இருந்த பிறபயணிகளும் முகம்மதுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதையடுத்துதான் முகம்மது குடும்பத்தினரை பயணம் செய்ய அனுமதித்தார் கண்டக்டர்.
இதற்கிடையே கண்டக்டரின் அநாகரீகமான செயலால் மனமுடைந்து போன முகம்மது, சென்னைவந்து சேர்ந்ததும் சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு அமைப்பில் புகார் செய்தார்.
இந்தப் புகாரை விசாரித்த குறை தீர்ப்பு அமைப்பின் தலைவர் கெங்க சுப்பையா, உறுப்பினர்கள்ஷீபா, கதிர்வேல் ஆகியோர் தங்கள் தீர்ப்பில்,
கண்டக்டரின் செயல் பணி அலட்சியத்தையே காட்டுகிறது. அவர் வரம்பு மீறி நடந்துள்ளார்.எனவே இதனால் மனு தாரர் முகம்மதுவுக்கு ஏற்பட்ட மனக் கஷ்டத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.5,000வழங்கப்பட வேண்டும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகமும், சம்பந்தப்பட்ட கண்டக்டரும் சேர்ந்து இதை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications