காதுகளை கிழித்த மைக்செட்கள் ஓய்ந்தன: சாத்தான்குளத்தில் பிரச்சாரம் முடிந்தது

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. நாளைமறுநாள் (26ம் தேதி) அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

இதனால் சாத்தான்குளத்தில் கடந்த 2 வாரங்களாக கதறிக் கொண்டிருந்த குழாய் ஒலிபெருக்கிகளும், ஆளுயரஸ்பீக்கர்களும் தங்கள் கத்தலை நிறுத்தின. இப் பகுதி மக்களின் காதுகளுக்கு மாலை 5 மணிக்குத் தான்விமோச்சனம் கிடைத்தது. புழுதி கிளப்பியபடி பறந்து கொண்டிருந்த டாடா சுமோக்கள், ஜீப்கள், வேன்களின்நடமாட்டமும் குறைந்துவிட்டது.

சாத்தான்குளம் எம்.எல்.ஏ.வாக இருந்த மணிநாடாரின் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல்நடக்கிறது. அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இங்கு நேரடிப் போட்டி நிலவுகிறது.

அதிமுக சார்பில் நீலமேகவர்ணமும், காங்கிரஸ் சார்பில் மகேந்திரனும் போட்டியிடுகிறார்கள்.இவர்களைத் தவிர 23 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த ஐந்து நாட்களாக இங்கு தீவிரப் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் சார்பில்அக்கட்சியின் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், அகில இந்தியபொதுச் செயலாளர்களான ரமேஷ் சென்னிதாலா, ஜி.கே. வாசன், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமிஉள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

பா.ஜ.கவினர் மறைமுகமாக அதிமுகவுக்கு ஆதரவாகவும், திமுகவினர் பகிரங்கமாகவே காங்கிரஸ்வேட்பாளருக்காகவும் பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்குமாறுகோரி திமுக சார்பில் இங்கு பிரமாண்டமான பொதுக் கூட்டமும் நடந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக விறுவிறுப்புடன் நடந்து வந்த பிரச்சாரம்இன்று ஓய்ந்தது.

இதையடுத்து வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கும் பணியில் அதிமுகவினரும் காங்கிரசாரும்ஈடுபட்டுள்ளனர்.

மோதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்தொகுதிக்கு உட்பட்ட 48 கிராமங்கள் பதற்றம் நிறைந்தவை என்று அடையாளம் காணப்பட்டுபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கை சின்னமும் இரட்டை இலையும்:

இதற்கிடையே சாத்தான்குளத்துக்கான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வந்து சேர்ந்துவிட்டன. இதில்முதலிடத்தில் காங்கிரசின் கை சின்னமும், அடுத்த இடத்தில் இரட்டை இலையும் அமைந்துள்ளன. மொத்தம் 174வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இடைத் தேர்தல் பணியில் மாநில அரசு அதிகாரிகளுக்குப் பதிலாக மத்திய அரசு அதிகாரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக்கில் மார்ச் 1ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கஉள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கே வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

வெடிகுண்டுகள்?

இதற்கிடையே சாத்தான்குளத்தில் பல இடங்களில் வெடிகுண்டுகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்துஅங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை மறுநாள் சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலின்போது சிலர் வன்முறையைக் கட்டவிழ்க்கத்திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சாத்தான்குளத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளியூர்களைச் சேர்ந்த ரவுடிகள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும்உள்ளூர் மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன.

சென்னை திரும்பினார் ஜெ. :

இதற்கிடையே சாத்தான்குளத்தில் கடந்த 6 நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்த முதல்வர்ஜெயலலிதா நேற்று சென்னை திரும்பினார். ஆறுமுகநேரியிலிருந்து கார் மூலம் தூத்துக்குடி சென்றுஅங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.

பெங்களூர் யு.பி. மதுபான நிறுவனத்தின் அதிபர் மல்லையாவின் விமானம் தான் ஜெயலலிதாவின்பயணத்துக்கு பயன்படுத்தப்பட்டது.

சாத்தான்குளத்தில் உள்ள அத்தனை கிராமங்களுக்கும் சென்று அதிமுக வேட்பாளர்நீலமேகவர்ணத்திற்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்த ஜெயலலிதா கிருஸ்தவர்கள் அதிகம்வசிக்கும் பகுதிகளுக்கு அதிகம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் தயார்: தேர்தல் அதிகாரிகள்

இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு சாத்தான்குளம் தொகுதி தயார் நிலையில் இருப்பதாகதொகுதியின் தேர்தல் அதிகாரியான வேலப்பன் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும், சம்பந்தப்பட்ட மண்டல தேர்தல்அதிகாரிகள் மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இதற்கிடையே சாத்தான்குளத்தில் தங்கியுள்ள வெளியூர்க்காரர்களை (ரெளடிகளை) உடனடியாகவெளியேற்றத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர்மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+