""தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன்"": கருணாநிதி
மதுரை:
இலக்கியத்திற்காக அரசியலை விட்டுவிட மாட்டேன், அதே நேரத்தில் அரசியலுக்காக இலக்கியத்தைஇழந்து விட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதி எழுதிய "தொல்காப்பிய பூங்கா" புத்தக இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழாநேற்று இரவு மதுரையில் நடைபெற்றது. கவியரசு வைரமுத்து வெளியிட மத்திய அமைச்சர் ராஜாஅந்தப் புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில்,
இலக்கியத்திற்காக அரசியலை விட்டுவிட மாட்டேன். அதே நேரத்தில் அரசியலுக்காக இலக்கியத்தைஇழந்து விடவும் மாட்டேன். இரண்டும் என் வாழ்வின் முக்கிய அம்சங்கள்.
தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் பாடுபடுவேன்.அரசியலிலும் தொடர்ந்து ஈடுபடுவேன்.
தமிழுக்காக வாழ்வதில் என்றும் தோல்வி ஏற்படப் போவதில்லை. இதனால் துன்பமும் கிடையாதுஎன்றார் கருணாநிதி.
""பி.டி.ஆரும் காளிமுத்துவும்..."":
முன்னதாக, முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்கும், தற்போதைய சபாநாயகரானகாளிமுத்துவுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்தும் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த திமுக ஆட்சியின்போது பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சபாநாயகராக இருந்தார். அப்போதுஅதிமுக உறுப்பினராக இருந்த தாமரைக்கனி திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைக் கன்னத்தில்அறைந்தார். இதனால் அவர் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து தாமரைக்கனியை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் பழனிவேல்ராஜன்.
இப்போது திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி விவகாரத்தில் அடிதடியே இல்லாத நிலையில்,யாரும் யாரையும் தாக்காத நிலையில் அவர் மீது கிரிமினல் குற்றம் சுமத்தி அவரை சிறையில்தள்ளியுள்ளார் காளிமுத்து.
இந்த முரண்பாடுகள் பற்றி உங்களுக்குத் (நிருபர்களுக்கு) தெரியும். மக்களும் இதைப் புரிந்துகொள்வார்கள் என்றார் கருணாநிதி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications